கருணாநிதிக்காக கழுத்தில் போட்டோ, கையில் கொடியுடன் காவேரியில் இராப்பகலாக காத்திருக்கும் 'அன்பு'!
Recommended Video

சென்னை: திமுக தலைவர் நலம்பெற வேண்டி தொண்டர் ஒருவர் கடந்த ஒரு வாரமாக இரவு பகலாக கேபாலபுரம் மற்றும் காவேரி மருத்துவமனை முன்பு காத்துக்கிடக்கிறார்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 25 ஆம் தேதி முதல் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். சிறுநீர் பாதையில் ஏற்பட்ட தொற்று மற்றும் காய்ச்சல் காரணமாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதனால் கோபாலபுரம் வீட்டிலேயே காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் கருணாநிக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

காவேரி மருத்துவமனை
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து அவர் நள்ளிரவில் ஆம்புலன்ஸ் மூலம் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

குவியும் தொண்டர்கள்
மூன்றாவது நாளாக கருணாநிதிக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோபாலபுரம் வீட்டிலும் சரி காவேரி மருத்துவமனையிலும் சரி அரசியல் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் கருணாநிதியை காண குவிந்து வருகின்றனர்.

திருவண்ணாமலை அன்பு
அப்படி குவியும் தொண்டர்களில் ஒருவர் தான் திருவண்ணாமலையை சேர்ந்த அன்பு. 54 வயதான இவர் கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவல் வெளியானதும் சென்னை வந்தார்.

கையில் கொடியுடன்
கருணாநிதிக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டபோது கோபாலபுரம் இல்லத்தின் முன்பு கையில் கொடியுடன் தலைவர் நலம்பெற்று வெளியே வரமாட்டாரா என காத்திருந்தார்.
|
கழுத்தில் படம்
பின்னர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து மருத்துவமனை முன்பு காத்திருக்கிறார். கையில் திமுக கொடியை சுமந்துகொண்டும் கழுத்தில் கருணாநிதியின் படத்தை மாட்டிக்கொண்டும் தலைவரை காணமாட்டோமா என காத்துக்கிடக்கிறார் அன்பு.

தீவிர விசுவாசி
திமுகவின் தீவிர விசுவாசியான அன்பு 1975முதல் கட்சியில் உள்ளார். இதனிடையே திமுக தலைவர் கருணாநிதி விரைவில் பூரண குணமடைய வேண்டி திமுக தொண்டர்கள் கோவில்களில் வழிபாடு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications