கோபாலபுரத்தில் உற்சாகத்துடன் அன்னதானம் வழங்கிய திமுக தொண்டர்கள்: வீடியோ
சென்னை கோபாலபுரம் கருணாநிதியின் வீட்டின் முன்பு, ஆயிரக்கணக்கில் கூடிய தொண்டர்கள் அன்னதானம், இனிப்பு வழங்கி கருணாநிதியின் 94ஆவது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடினார்கள்.
சென்னை: கோபாலபுரம் கருணாநிதி வீட்டில் அவருடைய பிறந்தநாள் விழாவை தொண்டர்கள் அன்னதானம் மற்றும் இனிப்பு வழங்கி உற்சாகமாகக் கொண்டாடினார்கள். அதனால் கோபாலபுரம் பகுதி பரபரப்பாக இருந்தது.

கருணாநிதியின் சட்டசபையில் 60ஆண்டுகள் சேவையாற்றிய வைரவிழா நேற்று சென்னை ராயபுரம் ஒஎம்சிஏ மைதானத்தில் மிக பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, பிகார் முதல்வர் நிதிஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை குழுத் தலைவர் டெரிக் ஓபராயன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அகில இந்தியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்நிலையில், கருணாநிதியின் இல்லத்தில் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி, தயாநிதி மாறன், துரைமுருகன் உள்ளிட்ட தலைவர்கள் கருணாநிதியை சந்தித்தனர். அங்கு தொண்டர்கள் ஆயிரக்க்கணக்கில் கூடி, கருணாநிதியின் 94ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினர். அப்போது பொதுமக்களுக்கு அன்னதானமும் இனிப்பும் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். கருணாநிதிக்கு மு.க.ஸ்டாலின் நினைவுப்பரிசு வழங்கினார்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications