எழுந்து வா, வென்று வா... காவேரி மருத்துவமனையிலிருந்து விண்ணை பிளக்கும் கோஷம்

எழுந்து வா, வென்று வா என்று காவேரி மருத்துவமனையின் வெளியே திமுக தொண்டர்கள் கோஷமிட்டனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதி நலம் பெற வேண்டி தொண்டர்கள் எழுப்பிய எழுந்து வா , வென்று வா என்ற கோஷம் விண்ணை பிளக்கிறது.

கருணாநிதி காய்ச்சல் ஏற்பட்டு கடந்த 24-ஆம் தேதி முதல் அவரது வீட்டிலேயே சிகிச்சை பெற்றுள்ளார். இதையடுத்து அவருக்கு நேற்று இரவு ரத்த அழுத்தம் குறைந்தது.

DMK Cadres chant in the outside of the Kauvery hospital

இதனால் அவர் நள்ளிரவில் ஆம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதிகாலை 3 மணி அளவில் அவரது உடல்நலம் சீரானது என்று கூறப்படுகிறது.

எனினும் இன்னும் 2 நாட்களுக்கு அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டியிருக்கும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. கருணாநிதிக்கு உடல் நிலை பிரச்சினையால் ஏற்பட்ட வதந்தியின்பேரில் கோபாலபுரத்துக்கு தொண்டர்கள் சாரை சாரையாக குவிந்து வந்தனர்.

இதனிடையே அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் மருத்துவமனை வாசலில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்துள்ளனர். அவர்கள் அனைவரும் எழுந்து வா, வென்று வா என்று கோஷமிட்டனர். இது விண்ணை பிளக்கும் அளவுக்கு இருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+