ஆம்பூர் தொகுதியை ம.ம.க.வுக்கு ஒதுக்கியதற்கு கண்டனம்- திமுகவினர் ஆர்ப்பாட்டம்
வேலூர்: ஆம்பூர் சட்டசபை தொகுதியை மனித நேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. பின்னர் உளுந்தூர்பேட்டை தொகுதியை நேற்று திமுகவிடமே மனித நேய மக்கள் கட்சி திருப்பி கொடுத்தது.

இந்த நிலையில் ஆம்பூர் தொகுதியையும் மனித நேய மக்கள் கட்சியிடம் இருந்து திரும்ப பெற வேண்டும் என்று திமுகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை வலியுறுத்தி இன்று திமுகவினர் ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
ஆம்பூர் தொகுதியில் திமுக வேட்பாளரையே நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே அணைக்கட்டு, பாளையங்கோட்டை என பல தொகுதி திமுக வேட்பாளர்களுக்கு திமுகவினரே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆம்பூரில் கூட்டணிக் கட்சியினருடனும் திமுகவினர் மல்லுக்கட்ட தொடங்கியிருப்பது திமுக தலைமையை கவலை அடைய வைத்துள்ளது.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications