தலைவர் மீண்டு(ம்) வருவார்... பிரம்மாண்ட திமுக கொடியுடன் தொண்டர்கள் காத்திருப்பு

தலைவர் மீண்டு வருவார் என்று பிரம்மாண்ட திமுக கொடியுடன் தொண்டர்கள் மருத்துவமனையில் காத்து கிடக்கின்றனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கருணாநிதியை பார்க்க மருத்துவமனையில் குவிந்து வரும் தொண்டர்கள்!- வீடியோ

    சென்னை: தலைவர் மீண்டும் வருவார் என்று பிரம்மாண்ட திமுக கொடியுடன் தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன்பு காத்து கிடக்கின்றனர்.

    கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கருணாநிதியின் உடலில் உள்ள முக்கிய உறுப்புகளை செயல்பட வைப்பது பெரும் சவாலாக உள்ளதாகவும் 24 மணி நேரம் கழித்தே அவரது உடல்நிலை குறித்து கூறமுடியும் என்றும் மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

    DMK Cadres takes huge DMK flag in front of Kauvery Hospital

    இதையடுத்து மருத்துவமனை முன்பு தொண்டர்கள் குவிந்தனர். இந்நிலையில் டெல்லியில் இருந்து திமுக எம்பிக்கள் வருகின்றனர். இத்தனை நாட்கள் காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்படும் போதெல்லாம் அழைத்து வரப்படாத தயாளு அம்மாள் இன்று அழைத்து வரப்பட்டார்.

    இதனிடையே மருத்துவமனை நிர்வாகம் வேறு கருணாநிதி உடல்நிலை குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. இதனால் தொண்டர்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர்.

    மேலும் மருத்துவர்கள் கொடுக்கப்படும் சிகிச்சையை கருணாநிதியின் உடல் ஏற்றுக் கொண்டு அதன் மூலம் முன்னேற்றம் அடைந்தால் அதை மீண்டும் இன்னொரு அறிக்கையாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்படும்" என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில் பிரம்மாண்ட திமுக கொடியுடன் தொண்டர்கள் இன்று 11-ஆவது நாளாக காத்து கிடக்கின்றனர். இன்றைய தினம் மீண்டும் ஒரு அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+