மைதீன்கானை மாற்றுங்கள்: கருணாநிதி வீட்டை முற்றுகையிட்டு திமுகவினர் போராட்டம்
சென்னை: நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் மைதீன்கானை மாற்றக்கோரி ஏராளமான திமுகவினர் சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டசபைத் தேர்தல் மே 16ம் தேதி நடைபெற உள்ளது. வரும் 22ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. இதனையொட்டி தி.மு.க வேட்பாளர் பட்டியல் 13ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் பாளையங்கோட்டை தொகுதியின் வேட்பாளராக ஏற்கெனவே மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்றவரான டி.பி.எம்.மைதீன்கான் பெயர் அறிவிக்கப்பட்டு இருந்தது.

மைதீன்கானுக்கு நான்காவது முறையாக வாய்ப்பு கொடுக்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்த அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் இதனை கொண்டாடி மகிழ்ந்தனர்.
அதே நேரத்தில் இந்த தொகுதியில் தனக்கு சீட் கிடைக்கும் என நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க செயலாளரான அப்துல் வகாப் கடும் அதிருப்தி அடைந்தார். அதனால், அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன், வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மைதீன்கானின் உருவ பொம்மையையும் எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
கட்சித்தலைமைக்கு புகார் அனுப்பினர். மின்னஞ்சல், ஃபேக்ஸ் அனுப்பியும் எதிர்ப்பினை பதிவு செய்தனர். இதனிடையே நேற்று பாளையங்கோட்டையில் இருந்து ஏராளமானோர் சென்னைக்கு படையெடுத்தனர். இன்று காலையில் திமுக தலைவர் கருணாநிதியின் வீடு அமைந்துள்ள கோபாலபுரம் பகுதிக்கு வந்த பாளை திமுகவினர் கூட்டமாக இணைந்து முழக்கமிட்டனர்.
கருணாநிதியின் வீட்டினை முற்றுகையிடவும் முயற்சி செய்தனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாளை திமுகவினர்,
கடந்த 15 வருடமாக இந்த தொகுதியில் போட்டியிட்டு வரும் டி.பி.எம்.மைதீன்கான் பொது மக்களிடம் நம்பிக்கையை இழந்துவிட்டார் என்று கூறினர்.
கட்சி நிகழ்ச்சிகள், ஆர்பாட்டங்கள் என எதிலுமே மைதீன்கான் பங்கேற்பதில்லை. அவரது பெயரைக் கேட்டாலே மக்களுக்கு எரிச்சல் தான் ஏற்படுகிறது. இந்த தொகுதியில் போட்டியிட தி.மு.க.வில் வேறு ஆளே இல்லையா? ஏன் அவருக்கு மட்டுமே தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். வேட்பாளரை மாற்றாவிட்டால் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கமாட்டோம் என்றும் தெரிவித்தனர்.
அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு வலுவடைந்து வருவதால் திமுக வேட்பாளர் பட்டியலில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications