தமிழகமே தத்தளிக்கிறது... "லோக்கல் பஞ்சாயத்து" செய்யும் நேரமா இது? திமுகவுக்கு வந்த சோதனை
பரபரப்பான அரசியல் சூழலில் ஈரோடு மாவட்ட உட்கட்சி பிரச்சனை குறித்து திமுக பஞ்சாயத்து நடத்தி வருவது அக்கட்சியினரை அதிருப்தி அடைய வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: தமிழக அரசியலே அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பிரதான எதிர்க்கட்சியான திமுகவோ ஈரோடு மாவட்ட உட்கட்சி பிரச்சனை குறித்து கட்டாயப் பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கிறது அக்கட்சி தொண்டர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.
தமிழக அரசியல் உச்சகட்ட குழப்பத்தில் இருக்கிறது. இந்த நேரத்தில் பிரதான எதிர்க்கட்சியான திமுக ஆக்கப்பூர்வமாக எதையுமே செய்யவில்லை என்கிற கோபம் அக்கட்சி தொண்டர்களுக்கு மட்டுமின்றி மக்களுக்கும் இருந்து வருகிறது.

மக்கள் ஆதங்கம்
ஆளுநரை பார்ப்பது, வழக்கு தொடருவது என நாங்களும் களத்தில் இருக்கிறோம் என்கிற ரீதியாகவே திமுக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நீட் தேர்வுக்கு எதிரான மாபெரும் மக்களின் தன்னெழுச்சி போராட்டத்தை சரியாக திமுக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்கிற ஆதங்கமும் மக்களிடத்தில் இருக்கிறது.

அடுத்தது திமுக எம்.எல்.ஏக்கள்?
தற்போது 18 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்திருக்கிறார். அதேபோல் எந்த நேரத்திலும் 21 திமுக எம்.எல்.ஏக்கள் உரிமை மீறல் பிரச்சனையில் சஸ்பென்ட் செய்யப்படலாம் என்கிற சூழல் இருக்கிறது.

ஈரோடு மாவட்ட பஞ்சாயத்து
இப்படி தமிழக அரசியல் பரபரத்துக் கொண்டிருக்க திமுக தலைமையோ அண்ணா அறிவாலயத்தில் உட்கார்ந்து ஈரோடு மாவட்ட உட்கட்சி பிரச்சனை குறித்து பேசிக் கொண்டிருக்கிறது. ஈரோடு மாவட்ட செயலர் முத்துசாமிக்கு மாஜி அமைச்சர்கள் இருவர் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள்.

திமுகவினர் அதிருப்தி
இது தொடர்பாக திமுக தலைமை தற்போது பஞ்சாயத்து நடத்திக் கொண்டிருக்கிறது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் திமுக வியூகம் வகுத்து செயல்பட வேண்டிய நேரம் இது. ஆனால் கட்டப்பஞ்சாயத்து செய்வதில் முனைப்புடன் இருக்கிறதே என்கிற அதிருப்தி அக்கட்சியினரிடத்தில் ஏற்பட்டுள்ளது.
-
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications