தலைவர் மீண்டு வருவார்: உணவு உறக்கமின்றி விடிய விடிய மருத்துவமனை முன்பு காத்திருக்கும் தொண்டர்கள்!
திமுக தலைவர் கருணாநிதி விரைவில் முழு குணமடைந்து மீண்டு வருவார் என்ற நம்பிக்கையில் விடிய விடிய திமுக தொண்டர்கள் மருத்துவமனை வளாகத்திலேயே காத்துக் கிடக்கின்றனர்.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி விரைவில் முழு குணமடைந்து மீண்டு வருவார் என்ற நம்பிக்கையில் விடிய விடிய திமுக தொண்டர்கள் மருத்துவமனை வளாகத்திலேயே காத்துக் கிடக்கின்றனர்.
திமுக தலைவர் கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இன்று 11வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் 10வது நாளான நேற்று கருணாநிதியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை பெரும் பீதியை ஏற்படுத்தியது.

மருத்துவமனை அறிக்கை
கருணாநிதியின் உடல் உறுப்புகளை சீராக செயல்பட வைப்பது பெரும் சவாலாக உள்ளது என்றும் 24 மணி நேரத்திற்கு பிறகே அவரது உடல்நிலை குறித்து கணிக்க முடியும் என்றும் மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

அரசியல் கட்சியினர் கலக்கம்
காவேரி மருத்துவமனையின் இந்த அறிக்கை தொண்டர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. அரசியல் கட்சித் தலைவர்களும் கலக்கமடைந்துள்ளனர்.

போலீஸ் பாதுகாப்பு
அறிக்கை வெளியான சில நிமிடங்களிலேயே அரசியல் கட்சியினரும் தொண்டர்களும் மருத்துவமனை முன்பு குவிய தொடங்கினர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இரவு முதல் காத்திருப்பு
தொடர்ந்து திமுக தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவிந்து வருகின்றனர். கருணாநிதியின் உடல்நிலை குறித்து நிம்மதி தரும் வகையில் அறிக்கை வெளிவராதா என்ற ஏக்கத்தில் இரவு முதல் தொண்டர்கள் மருத்துவமனை முன்பு காத்துக்கிடக்கின்றனர்.

உணவு உறக்கமின்றி
உணவு உறக்கமின்றி கண்களில் கண்ணீருடன் இரவு முதல் காத்துக்கிடக்கும் தொண்டர்கள் தங்களின் தலைவர் எப்படியும் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையில் மருத்துவமனை முன்பு கூடியுள்ளனர்.












Click it and Unblock the Notifications