For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுகவின் ஊழலுக்கும் முறைகேடுக்கும் தீர்வாக திமுக இருக்க முடியும்: கமல்ஹாசன்

அதிமுகவின் ஊழலுக்கும், முறைகேடுக்கும் தீர்வாக திமுக இருக்க முடியும் என்று கமல் ஹாசன் தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவின் ஊழலுக்கும், முறைகேடுக்கும் தீர்வாக திமுக இருக்க முடியும் என்று தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் நடிகர் கமல் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

DMK can be the solution for ADMK's scandal, says Kamal

கேள்வி:- அ.தி.மு.க.வுக்கு மாற்று தி.மு.க. இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா?.

பதில்:- இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ரஜினிக்கு நிகரான நடிகர் நீங்கள் என்றால், இல்லவே இல்லை என்று நான் சொல்வேனா?. அல்லது கமலுக்கு நிகரான நடிகர் நீங்கள் என்றால், இல்லவே இல்லை என்று ரஜினி சொல்வாரா?, சொல்லப்போவதில்லை.

கேள்வி: நீங்கள் வேதனைப்படுகிற இந்த ஊழலுக்கும், இந்த முறைகேடுகளுக்குமான தீர்வாக தி.மு.க. இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?.

பதில்: இருக்க முடியும். ஏன் அ.தி.மு.க.வாலேயே முடியும் என்று சொல்கிறேன். ஏன் தி.மு.க.வால் முடியாது. அந்த மாற்றத்தை அவர்கள் விரும்ப வேண்டாமா?.

கேள்வி: தி.மு.க.வும், இதர கட்சிகளும் நல்லாட்சியை தர முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?.

பதில்: முடியும். பண்ணலாம். இருக்க வைக்க வேண்டும். அது தான் நம்முடைய கடமை. ஊடகமாகிய அது உங்களுடைய கடமை. மக்களாக, கமல்ஹாசனாக என்னுடைய கடமை. திடீரென்று என்னுடைய வீரத்தை எங்கிருந்து பாராட்டுகிறார்கள். எப்போது வந்தால் என்ன?. அதை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

கேள்வி: உங்களுடைய பலத்தை நாமே பரிசோதித்து பார்ப்போம் என்றோ, மற்றவர்களுக்கு காட்டுவோம் என்றோ ஒரு முயற்சியை நீங்கள் பண்ணியிருக்கிறீர்களா?.

பதில்: பலத்தை அடித்து பிடித்து காட்டுவதற்கு வந்து மறுபடியும் காந்தியை சுடுவதுபோல் ஆகும்.

கேள்வி: அரசியலை ஒரு கை பார்த்துவிடுவது என்று கமல் முடிவு செய்துவிட்டாரா?.

பதில்: அமைதியாக இருக்கக்கூடாது என்பது என்னுடைய கடமை.

கேள்வி: அப்படி என்றால் வாருங்கள் குரல் கொடுப்போம் என்பது கமல்ஹாசனின் ஒரு வரி தகவலா?

பதில்:- குரல் கொடுப்போம். அதாவது சாத்தியம் என்பது சொல் அல்ல. செயல்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

English summary
Kamal Hassan says that DMK will be an alternative party and it can be a solution for ADMK's scandal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X