காவிரி: திமுகவின் பிப். 23 அனைத்து கட்சிக் கூட்டம் ரத்து
காவிரி தீர்ப்புக்காக திமுக கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: காவிரி தீர்ப்பு தொடர்பாக வரும் 23-ந் தேதி திமுக கூட்டியிருந்த அனைத்து கட்சிக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. அதில் தமிழகத்துக்கான நீரின் அளவை குறைத்தும் கர்நாடகாவுக்கு கூடுதல் நீரை வழங்கியும் உத்தரவிடப்பட்டது.

தமிழகத்தை வஞ்சிக்கும் இத்தீர்ப்பு குறித்து விவாதிக்க அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட திமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் அரசு தரப்பில் எந்த பதிலும் வரவில்லை.
இதையடுத்து வரும் 23-ந் தேதி திமுக, அனைத்து கட்சிகள் கூட்டம் நடைபெறும் என அறிவித்தது. இக்கூட்டத்துக்கு அதிமுக, பாஜக மற்றும் கமல் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வரும் 22-ந் தேதி தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தும் என இன்று அறிவிக்கப்பட்டது. இதனால் திமுக கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் ரத்து செய்யப்படும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
அரசு கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்று திமுக ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications