டிரகியாஸ்டமி கருவி மாற்றம்.. காவிரி மருத்துவமனையில் கருணாநிதி அட்மிட்
Recommended Video

சென்னை: மூச்சுக்குழாய் மாற்று சிகிச்சைக்காக திமுக தலைவர் கருணாநிதி இன்று காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொண்டை மற்றும் நுரையீரல் நோய் தொற்று காரணமாக மூச்சுவிட சிரமப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி, 2016ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி ஆழ்வார்பேட்டையிலுள்ள காவிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
டிசம்பர் 23ம் தேதி கருணாநிதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இருப்பினும், அவ்வப்போது, மருத்துவமனைக்கு சென்று டிரகியாஸ்டமி கருவியை மாற்றி வருகிறார். அதேபோல இன்றும் கருணாநிதி காவிரி மருத்துவமனை சென்றார். இன்று அவருக்கு 4வது முறையாக டிரகியாஸ்டமி கருவி மாற்றப்படுகிறது. மாலையில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என காவிரி மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
பேச முடியாததன் காரணம்
டிஸ்சார்ஜ் செய்தபோது, 2 வாரங்களுக்கு மட்டுமே இந்த கருவி தேவைப்படும் என மருத்துவமனை தெரிவித்திருந்தது. ஆனால், இதுவரை அந்த கருவியை முழுமையாக அகற்ற முடியவில்லை. இதனால்தான், கருணாநிதியால் பொது இடங்களில், பேச முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டிரகியாஸ்டமி சிகிச்சை முறை
டிரகியாஸ்டமி சிகிச்சை என்றால் என்ன: தொண்டையின் நடு பகுதியில் பெரிய துளையிட்டு, அதற்குள் டியூப்பை நுழைத்து, டியூப் மூலம் காற்று குழாயை இணைத்து நுரையீரலுக்கு நேரடியாக ஆக்சிஜனை கொண்டு சேர்க்கும் சிகிச்சை நடைமுறை டிரகியாஸ்டமி (tracheostomy) என்று அழைக்கப்படுகிறது.

கருவி பொருத்த காரணம் என்ன
தொண்டையிலுள்ள மூச்சு குழல் சேதமடைந்திருந்தால் இதுபோன்ற செயற்கை முறையிலான சுவாசம் அவசியப்படுகிறது. நோய் தொற்று காரணமாக தொண்டையிலிருந்து நுரையீரல் செல்லும் குழாய் பாதிக்கப்பட்டிருக்கும்போதும், டிரகியாஸ்டமி சிகிச்சை கொடுக்கப்படுகிறது.

கழுத்தில் இணைப்பு குழாய்
தொண்டையில் ஓட்டை போட்டு டியூபை பொருத்திய பிறகு அந்த பகுதியை சுற்றிலும் தையல் போடப்படும். தொண்டையில் பொருத்தப்படும் டியூபை தேவைப்படும்போது எடுத்துவிடுவார்கள். தேவைப்படும்போது பொருத்திக்கொள்வார்கள். ஆனால் தொண்டையில் பொருத்தப்பட்ட இணைப்பு குழாய் அப்படியே இருக்கும்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications