5ம் தேதி காலை 10 மணியளவில்.. திமுக செயற்குழு கூடுகிறது!
சென்னை: திமுக செயற்குழுக் கூட்டம் மார்ச் 5ம் தேதி வியாழக்கிழமை காலை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் கூடுகிறது. இதற்கான அறிவிப்பை திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் 5ம் தேதி காலை 10 மணியளவில் திமுக தலைமை செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும். கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்து இதில் விவாதிக்கப்பட உள்ளது என்று அன்பழகன் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கலாம் என்பது குறித்து இக்கூட்டத்தில் கட்சியினரின் கருத்துக்களை திமுக தலைமை கேட்கவுள்ளதாக ஏற்கனவே பேச்சு உள்ளது என்பது நினைவிருக்கலாம்.

இளைஞர் அணி கூட்டத்தைக் கூட்டும் ஸ்டாலின்
இதற்கிடையே, திமுக இளைஞர் அணி கூட்டம் 8ம் தேதி கூட்டப்படுகிறது. இதுகுறித்து கட்சி பொருளாளரும் இளைஞர் அணி செயலாளருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுக இளைஞர் அணி மாவட்ட மாநகர, மாநில அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் கூட்டம் 8 ம் தேதி மாலை 4 மணியளவில் கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள ஹோட்டல் கிளாரியனில் நடைபெறுகிறது.
இணைச்செயலாளர் திருப்பூர் மு.பெ.சாமிநாதன், துணைச்செயலாளர்கள் ஆர்.டி.சேகர், சுபா சந்திர சேகர், ப.தாயகம் கவி, அசன் முகமது ஜின்னா, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பைந்தமிழ் பாரி ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடைபெறும்.
இதில் மாவட்ட மாநகர, மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications