சட்டசபைத் தேர்தல் குறித்து விவாதிக்க மா.செ.க்கள் கூட்டத்தைக் கூட்டுகிறது திமுக... !
சென்னை: திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை திமுக கூட்டியுள்ளது. வரும் 21ம் தேதி சென்னையில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் விடுத்துள்ள அறிக்கையில், திமுக தலைவர் கருணாநிதி தலைமையில், திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 21.3.2016 திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும்.

அதில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று அன்பழகன் கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தல் தொடர்பாக விவாதிக்கவே இந்தக் கூட்டத்தைக் கூட்டியிருப்பதாக அன்பழகன் தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் தேர்தல் கூட்டணி, தேர்தல் அறிக்கை உள்ளிட்டவை குறித்து மாவட்டச் செயலாளர்களிடம் விளக்கி ஒப்புதல் பெறப்படும் என்று தெரிகிறது.
தேமுதிக கூட்டணிக்கு வராமல் போய் விட்ட நிலையில் முக்கிய கட்சியாக காங்கிரஸ் மட்டுமே திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. இதுதவிர பல்வேறு குட்டிக் கட்சிகள் மற்றும் ஜாதி, மத அமைப்புகளும் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவில் மீண்டும் ‘செயல் தலைவர்’ பதவி? களமிறக்கப்படும் உதயநிதி - கனிமொழி.. ஸ்டாலின் பிளான் என்ன? -
கிளிக்கு றெக்கை முளைச்சுடுத்து... பறந்து போயிடுத்து! ஸ்டாலினை பார்த்த ஆளூர்? எம்பியாக்கும் திருமா? -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
தலைமைச் செயலகத்தை தவெக கட்சி அலுவலகமாக மாற்றுவதா? திமுக எம்பி வில்சன் கண்டனம் -
ஸ்டாலின் மாஸ்டர் பிளான்.. திமுகவை டோட்டலாக ரீவேம்ப் செய்கிறாரா? கூட்டணி கட்சிகளுக்கு பெரிய ஆப்புதானா -
ஃபேக் நியூஸ்.. தூக்கம் தொலைத்த திமுக நிர்வாகிகள்.. களம் இறங்கிய திமுக தலைமை.. வில்சன் எம்பி அதிரடி -
குதிரை வேகத்தில் குதிரை பேரம்! இந்த கண்றாவி காட்சியை பார்க்கத்தான் ஓட்டு போட்டார்களா? -மு.க.ஸ்டாலின் -
திமுகவிற்கு குட்பையா? தனிச்சின்னத்தில் போட்டியிட துடிப்பது ஏன்? சர்ச்சைக்கு நடுவே விளக்கிய ஜவாஹிருல்லா -
வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ! திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் தவெக! அடித்து துவைத்த அர்ஜுன் சம்பத்












Click it and Unblock the Notifications