திமுகவின் அனைத்து கட்சி கூட்டத்தில் எனக்கு அழைப்பில்லை.. கமல்ஹாசன் ஆதங்கம்!
காவிரி விவகாரத்தில் திமுகவின் அனைத்து கட்சி கூட்டத்தில் தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கமல்ஹாசன் தூத்துக்குடியில் பேட்டியளித்துள்ளார்.
தூத்துக்குடி: காவிரி விவகாரத்தில் திமுகவின் அனைத்து கட்சி கூட்டத்தில் தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கமல்ஹாசன் தூத்துக்குடியில் பேட்டியளித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 49 ஆம் நாளாக போராடும் குமரெட்டியாபுர மக்களுடன் மக்களாக அமர்ந்து கமல்ஹாசன் களமிறங்கி உள்ளார். போராட்ட களத்தில் மக்களை சந்திக்க மக்கள் நீதி மய்யம் சார்பாக கமல்ஹாசன் இன்று தூத்துக்குடி சென்றார்.

தூத்துக்குடியில் மக்கள் மத்தியில் கமல்ஹாசன் பேட்டி அளித்தார். இதில் ஸ்டெர்லைட் விவகாரம் மட்டுமில்லாமல் காவிரி மேலாண்மை வாரியம் குறித்தும் அவர் பேசினார்.
ஸ்டெர்லைட் குறித்து பேசிய அவர் ''தாமிர ஆலை வேண்டுமெனில் குடியிருப்பு பகுதியில் வைக்கக் கூடாது. மக்கள் உயிரை விட காப்பர் முக்கியமாகிவிட்டதா?. ஸ்டெர்லைட் ஆலையில் தற்போது ஆய்வு நடத்துவதால் எந்த பயனும் இல்லை. இந்த ஆய்வு எல்லாம் முன்பே செய்திருக்க வேண்டும்'' என்றார்.
மேலும் ''காவிரி விவகாரத்தில் மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து திமுக அனைத்து கட்சி கூட்டம் நடத்துகிறது. ஆனால் திமுகவின் அனைத்து கட்சி கூட்டத்தில் எனக்கு அழைப்பில்லை'' என்று கமல்ஹாசன் பேட்டியளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications