சட்டசபை கூட்டத் தொடர் முழுவதும் திமுக எம்.எல்.ஏக்கள் சஸ்பென்ட்

தமிழக சட்டசபையில் இன்று அதிமுகவின் புதுக்கோட்டை விஜயபாஸ்கர் தெரிவித்த கருத்துக்கு திமுக, தேமுதிக எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுக எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் இருக்கை முன்பு நின்று கொண்டு விஜயபாஸ்கர் தெரிவித்த கருத்தை சபை குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
ஆனால் இந்த கோரிக்கையை சபாநாயகர் ஏற்க மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து திமுக எம்.எல்.ஏக்களை வெளியேற்றுமாறு சபை காவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.
இதேபோல் விஜயபாஸ்கர் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபைக்குள் தேமுதிக எம்.எல்.ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதை அனுமதிக்க முடியாது என்று கூறிய சபாநாயகர், தர்ணாவில் ஈடுபட்ட தேமுதிகவின் 11 எம்.எல்.ஏக்களையும் சபையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களும் வெளியேற்றப்பட்டனர்.
சட்டசபையில் இருந்து தொடர்ந்து 3வது முறையாக திமுகவினர் வெளியேற்றப்பட்டுள்ளதால் 3 முறை வெளியேற்றப்பட்ட திமுக உறுப்பினர்கள் அனைவரும் சஸ்பென்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
கடந்த 23ந் தேதி தொடங்கிய சட்டசபை கூட்டம் நாளை வரை நடைபெற உள்ளது.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க!











Click it and Unblock the Notifications