திமுக எல்லாவற்றிலும் அரசியல் செய்கிறது.. போட்டுத்தாக்கிய ரஜினி!
திமுக எல்லாவற்றிலும் அரசியல் செய்கிறது என நடிகர் ரஜினிகாந்த் விளாசியுள்ளார்.
Recommended Video

தூத்துக்குடி: துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடி சென்றார். பாதிக்கப்பட்ட மற்றும் கயாமடைந்த மக்களை அவர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும், மேலும் காயமடைந்தவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் திமுக சட்டசபையை புறக்கணித்து போராட்டம் நடத்துவதையும் போட்டு தாக்கினார்.

இரும்புக்கரம் கொண்டு
அவர் பேசியதாகவது, தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியுள்ளனர். சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஜெயலலிதா அடைக்கி வைத்திருந்தார்.

ஒடுக்க வேண்டும்
தற்போது தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகமாகிவிட்டனர். சமூக விரோதிகளை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

அனுமதிக்கக் கூடாது
தொழிற்சாலையை மூட அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இனிமேல் அந்த ஆலையை திறக்க முடியாது. நீதிமன்றம் அல்லது வேறு எங்கு சென்றாலும் ஆலையை திறக்க அனுமதிக்கக் கூடாது.

ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
தமிழகம் போராட்டக் களமாக மாறியிருக்கிறது. தமிழகத்தில் அடிக்கடி போராட்டம் நடக்கிறது. அனைத்திற்கும் போராட்டம் என்பதும் தீர்வாகாது. சிலபோராட்டங்கள் தூண்டிவிடப்படுகின்றன; போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும்.

செய்தியாளர்கள் கேள்வி
இவ்வுளவு பெரிய சம்பவம் நடந்ததற்கு அரசின் அலட்சியம் தான் காரணம். அரசுக்கு இது பெரிய பாடமாக இருக்கும் என்று நம்புகிறேன் என்றார் ரஜினி. அப்போது குறுக்கிட்ட செய்தியாளர்கள் திமுகவினர் சட்டசபையை புறக்கணித்துவிட்டு போராட்டம் நடத்துகின்றனரே அதற்கு உங்கள் பதில் என்னவென்று கேட்டனர்.

எல்லாவற்றிலும் அரசியல்
அதற்கு பதிலளித்த ரஜினி எல்லாவற்றிலும் அரசியல் செய்கிறார்கள் என்றார். மக்கள் எல்லாவற்றையும் பார்க்கிறார்கள். மக்களுக்கு எல்லாம் தெரியும். நேரம் வரும் போது மக்கள் நியாயத்தை காட்டுவார்கள். இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
-
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில் -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications