6 தொகுதிகளில் 3வது இடத்தில் திமுக; குமரி, புதுவையில் 4வது இடம்!!

தமிழகத்தில் 35 தொகுதிகளில் திமுக போட்டியிட்டது. இக்கட்சி போட்டியிட்ட இடங்களில் பெரும்பாலும் 2வது இடத்தில் இருக்கின்றன.
இருப்பினும் கொங்கு மண்டலத்தின் கோவை, ஈரோடு, பொள்ளாச்சி, திருப்பூர் மற்றும் தருமபுரி, விருதுநகரில் 3வது இடத்துக்கும் கன்னியாகுமரி, புதுச்சேரி தொகுதிகளில் 4வது இடத்துக்கும் திமுக தள்ளப்பட்டிருப்பது அக்கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
3வது இடத்துக்கு திமுக தள்ளப்பட்ட தொகுதிகளும் அதில் கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரமும்:
1. கோவை
அதிமுக- நாகராஜன்- 431717
பாஜக- சி.பி. ராதாகிருஷ்ணன்- 389701
திமுக- கணேஷ்குமார்- 217083
2. ஈரோடு
அதிமுக- செல்வகுமார்- 466995
மதிமுக- கணேசமூர்த்தி- 255432
திமுக- பவித்திரவள்ளி- 217260
3. பொள்ளாச்சி
அதிமுக- மகேந்திரன்- 417092
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி- ஈஸ்வரன்- 276118
திமுக- பொங்கலூர் பழனிச்சாமி- 251829
4. திருப்பூர்
அதிமுக- சத்யபாமா- 442778
தேமுதிக- தினேஷ்குமார்- 263463
திமுக- செந்தில்நாதன்- 205411
5. தர்மபுரி
பாமக- அன்புணி ராமதாஸ்- 468194
அதிமுக- மோகன்- 391048
திமுக- தாமரைச்செல்வன்- 180297
6. விருதுநகர்
அதிமுக- ராதாகிருஷ்ணன்- 406694
மதிமுக- வைகோ- 261143
திமுக- ரெத்தினவேலு- 241505
குமரி, புதுவையில் 4வது இடம்
கன்னியாகுமரி
பாஜக- பொன். ராதாகிருஷ்ணன்- 372906
காங்கிரஸ்- வசந்த்குமார்- 244244
அதிமுக- ஜான் தங்கம்- 176239
திமுக- ராஜரத்தினம்- 117933
சிபிஎம்- பெலார்மீன்- 35284
ஆம் ஆத்மி- உதயகுமார்- 15314
புதுச்சேரி
என்.ஆர். காங்கிரஸ்- ராதாகிருஷ்ணன்- 255826
காங்கிரஸ்- நாராயணசாமி- 194972
அதிமுக- ஓமலிங்கம்- 132657
திமுக- நஜீம்- 60580
பாமக- அனந்த்ராமன்- 22754
சிபிஐ- விஸ்வநாதன்- 12709












Click it and Unblock the Notifications