சொத்து குவிப்பு- திமுக மாஜி எம்.எல்.ஏ மாரிமுத்துவுக்கு 4 ஆண்டு ஜெயில்
சொத்து குவிப்பு வழக்கில் திமுக மாஜி எம்.எல்.ஏவுக்கு சிறை தண்டனை.
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்துவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது விழுப்புரம் நீதிமன்றம்.
1996-2001-ல் வானூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வாக இருந்தவர் மாரிமுத்து. இவர் தமது பதவி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ16 லட்சம் சொத்து குவித்தார் என வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கின் விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி பிரியா, மாஜி எம்.எல்.ஏ. மாரிமுத்து, அவரது மனைவி துளசியம்மாள், மகன் பிரகாஷ் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தார்.
மேலும் 3 பேரும் தலா ரூ10,000 அபராதம் கட்ட வேண்டும்; இல்லையெனில் கூடுதலாக 6 மாதம் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி பிரியா தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications