அரசியல் வேறு... உதவி செய்வது வேறு... இரண்டையும் பிரித்து செய்யும் திமுக பிரமுகர்..!
தென்காசி: அரசியலையும், உதவி செய்வதையும் ஒன்றோடொன்று பொருத்தி பார்க்கத்தேவையில்லை என்ற ரீதியில் ஏழை மாணவர்களின் கல்விக்கட்டணம் விவகாரத்தில் மறுப்பு சொல்லாமல் இயன்றதை செய்து வருகிறார் திமுக பிரமுகர் அய்யாதுரை பாண்டியன்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த அய்யாதுரை பாண்டியன் தொழிலதிபராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர். கடந்த 2018-ம் ஆண்டு திமுகவில் இணைந்த அவர் மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

திமுகவில் வர்த்தகர் அணி மாநில துணைச் செயலாளராக உள்ள இவர் தென்காசி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட கடையநல்லூரை மையமாக வைத்து அரசியல் செய்து வருகிறார். மேலும் அங்கு தான் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு சீட்டும் எதிர்பார்க்கிறார்.
இதனிடையே அரசியலை கடந்து கல்வி என்று வந்துவிட்டால், உதவிக் கேட்டு வரும் மாணவர்களின் குடும்பத்தினர் எந்தக் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதை இவர் பார்ப்பதில்லை. பள்ளி ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணம், நீட் கோச்சிங் கட்டணம் என குறைந்தது ஆண்டுக்கு 250 மாணவர்களுக்காவது நிதி உதவி செய்கிறார்.

இதன் காரணமாகவே கட்சிக்கு அப்பாற்பட்டு அய்யாதுரை பாண்டியனுக்கு சங்கரன்கோவில் மற்றும் கடையநல்லூர் பகுதிகளில் மிகுந்த செல்வாக்கு காணப்படுகிறது. மேலும், கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பை இழந்தவர்களுக்காக சங்கரன்கோவில் மற்றும் கடையநல்லூரில் இரண்டு வேலைவாய்ப்பு முகாம்களையும் நடத்தி அப்பகுதி இளைஞர்களை ஈர்த்துள்ளார்.
அரசுப் பள்ளிகளில் பயின்று 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தும் கட்டணம் செலுத்த வசதியில்லாத 7 மாணவிகளின் 5 ஆண்டுகளுக்கான கல்விச்செலவை அய்யாதுரைபாண்டியனே ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. பணமிருந்தும் கொடுக்க மனமில்லாத அரசியல்வாதிகளுக்கு மத்தியில் இவரை போன்ற நபர்கள் வெகு சிலரே அனைத்து அரசியல் கட்சிகளிலும் உள்ளனர்.
-
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்!












Click it and Unblock the Notifications