பயத்தை காட்டிட்டாங்க பரமா.. கூவத்தூரிலிருந்து அலறும் அதிமுக எம்எல்ஏக்கள்!
கூவத்தூர் ரிசார்ட்டில் சிக்கியுள்ள அதிமுக எம்.எல்.ஏக்கள் அங்கருந்து தப்ப முடியாத அளவுக்கு அடைபட்டிருப்பதாக கூறியுள்ளனர்.
சென்னை: கூவத்தூர் ரிசார்ட்டுக்குள் அடைபட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏக்கள் அங்கருந்து வெளியேற முடியாத அளவுக்கு சுற்றி வளைத்து ஆட்களைப் போட்டுள்ளதாக ஒரு தகவலை புகைப்படத்துடன் அரியலூர் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான எஸ்.எஸ்.சிவசங்கர் தனது முகநூலில் போட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் போட்டுள்ள பதிவு:
கூவத்தூர் ரிசார்டில் இருந்து நம் நண்பர் அனுப்பிய படம். உடனே அவர் எந்தத் தொகுதி எம்.எல்.ஏ அப்படின்னுலாம் கேட்கக் கூடாது. செய்தி தான் முக்கியம்.
சூப்பர் ரிசார்டாம். நல்ல சாப்பாடாம். மக்கள் திட்டுறது தான் சிலருக்கு கவலையாம். அதை விட பாதுகாப்புக்கு இருக்கறவங்க பார்வை தான் கொடுமையா இருக்காம்.
"எலெக்ஷன் வராம இருக்கனுமேன்னு கட்சி இந்த முடிவ எடுத்தது. அதனால தான் இவங்கக் கிட்ட வந்தோம், இப்பவும் எலெக்ஷன் வந்துடும் போலருக்கு. இவங்க ரெண்டு பேருமே கரை சேர்ப்பாங்கன்னு நம்பிக்கை இல்லை.

கரை சேர்க்கக்கூடியவங்க கூப்பிட மாட்டேங்கறாங்க. சீக்கிரமா ஒரு முடிவு வந்தா நல்லது. ஏரியா கம்ப்ளீட்டா சீல்டு. வெளியில் வர வழியில்லை", என்றார்.
உண்மையில் குரலில் கஷ்டம் தெரிந்தது.
#பயத்த காட்டிட்டாங்க பரமா!
சிவசங்கர் கூறியுள்ள தகவலைப் பார்த்தால் உள்ளே அடைபட்டுள்ள அத்தனை பேரையும் செமத்தியாக சிறைப்படுத்தி வைத்துள்ளனர் என்பது உறுதியாகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications