For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பார்வையற்ற பட்டதாரிகள் போராட்டம்: அம்மா போஸ்டர்களுக்கு அர்த்தம் என்ன?: கருணாநிதி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: பார்வையற்ற பட்டதாரிகளை அரசு தவிக்க விடுகிறது. அரசு மனம் இறங்காமல் இருந்தால், சென்னையைச் சுற்றி ஒட்டப்பட்டிருக்கும் "அம்மா போஸ்டர்"களுக்கு அர்த்தமே இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். தி.மு.க பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 1ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் பொதுக்குழுவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றார்.

மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்து கேட்டதற்கு, தலைவர்களுக்கு ஆதரவும், எதிர்ப்பும் வருவது இயல்பானதுதான் என்றார்.

பார்வையற்ற பட்டதாரிகளின் தொடர் போராட்டம் குறித்து கேட்டதற்கு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பார்வையற்ற பட்டதாரிகளை மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசினார் என்றார்.

இவ்வளவிற்கும் பிறகு இங்கே உள்ள அ.தி.மு.க. அரசு மனம் இறங்காமல் இருந்தால், சென்னையைச் சுற்றி ஒட்டப்பட்டிருக்கும் "அம்மா போஸ்டர்"களுக்கு அர்த்தமே இல்லை.

மீனவர்கள் விடுதலைக்காக அ.தி.மு.க போராட்டம் அறிவித்துள்ளது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த கருணாநிதி, தமிழக, புதுச்சேரி மீனவர்களுக்காக தி.மு.க போராட்டம் நடத்தியுள்ளது என்று கூறினார்.

English summary
Dravida Munnetra Kazhagam's general council, the top policy-making body of the party, will meet here on December 1 to take several ‘important decisions', party chief M. Karunanidhi said on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X