கோபத்தில் அழகிரி.. குழப்பத்தில் திமுக.. அவசர அவசரமாக பொதுக்குழுவை கூட்டுகிறாரா ஸ்டாலின்?
திமுக பொதுக்குழு கூட்டம் மிகவும் அவசர அவசரமாக கூட்டப்படுவதாக திமுக உறுப்பினர்கள் பேசிக்கொள்கிறார்கள்.
சென்னை: திமுக பொதுக்குழு கூட்டம் மிகவும் அவசர அவசரமாக கூட்டப்படுவதாக திமுக உறுப்பினர்கள் பேசிக்கொள்கிறார்கள். இதனால் திமுக உறுப்பினர்கள் இடையே சலசலப்பு எழுந்துள்ளது. இதற்கு நிறைய காரணம் இருக்கிறது என்று திமுகவினர் பேசிக்கொள்கிறார்கள்.
திமுக பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 28ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளது.
மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுக்குழு நடைபெறும். திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் நடக்கும் முதல் பொதுக்குழு கூட்டம் இதுவாகும்.

தலைவர் தேர்தல்
ஆகஸ்ட் 28-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் தி.மு.க. தலைவர், பொருளாளர் தேர்தல் நடைபெறும் என்று க.அன்பழகன் அறிவித்துள்ளார். பெரும்பாலும் திமுக தலைவராக தற்போதைய செயல்தலைவர் ஸ்டாலின் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால் பொருளாளர் துரைமுருகனா, கனிமொழியா என்ற கேள்வி மட்டும் எழுந்துள்ளது.

திட்டமிட்டது எப்போது
இந்த பொதுக்குழு முதலில், செப்டம்பர் 1ம் தேதி நடத்தப்படலாம் என்றுதான் கூறப்பட்டது. இதற்காக கடந்த செயற்குழு கூட்டத்திலேயே ஏற்பாடுகள் நடந்து இருக்கிறது. ஆனால் திடீர் என்று பொதுக்குழு தேதியை மாற்றி இருக்கிறார்கள். அவசர அவசரமாக இந்த மாதம் 28ம் தேதியே கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.

ஸ்டாலின் எடுத்த முடிவு
இது முழுக்க முழுக்க ஸ்டாலின் எடுத்த முடிவு என்றும் திமுக தரப்பில் பேசிக்கொள்கிறார்கள். தேதியை மாற்றுவது குறித்து அவர் க. அன்பழகனுடன் மட்டும் விவாதம் செய்து வேகமாக அறிவிப்பை வெளியிட்டு விட்டார் என்று கூறுகிறார்கள். அழகிரி செப்டம்பர் 5ம் தேதி பேரணி நடத்த இருப்பதால், இந்த கூட்டத்தை விரைவில் நடந்த வேண்டும் என்று ஸ்டாலின் இப்படி செய்ததாக திமுகவில் சில முக்கிய தலைவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.

முக்கியமான அறிவிப்பு
அதே சமயம், இதில் இன்னொரு அதிசயமும் நடக்கலாம் என்றும் கோபாலபுரம் வட்டாரங்கள் பேசிக்கொள்கிறது. பொதுக்குழு கூட்டத்தில் ஆச்சர்யம் அளிக்க கூடிய அறிவிப்புகள் எதாவது வெளியாக வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள். அழகிரி மெரினா நோக்கி நடக்க போகும் பேரணியை கருத்தில் கொண்டே இந்த ஏற்பாடுகள் நடக்கிறது என்பதில் மட்டும் திமுக உறுப்பினர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications