நாடாளுமன்ற தேர்தலில் திமுக தனித்தே போட்டி: கருணாநிதி- பா.ஜ.க அழைத்தால் பார்ப்போம்
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தனித்தே போட்டியிடும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
சென்னை கோபாலபுரத்தில் கருணாநிதியை முஸ்லிக் லீக் தலைவர் காதர் மொய்தீன் இன்று சந்தித்து பேசினார். அப்போது பாஜக, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்ததற்காக கருணாநிதிக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

பின்னர் கருணாநிதி அளித்த பேட்டி:
கேள்வி: நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று திமுக பொதுக்குழுவில் கூறப்பட்டதே? அப்படி என்றால் திமுக தனித்து போட்டியிடுமா?
கருணாநிதி: ஆமாம். தோழமை கட்சிகளுடன் இணைந்து தி.மு.க. தனித்துப் போட்டியிடும்.
கேள்வி: தி.மு.க. தலைமையில் 3வது அணி உருவாவது போல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன் கூறியுள்ளாரே?
கருணாநிதி: அவர் சொன்னதற்கு மகிழ்ச்சி. 3வது அணி அமைய வாய்ப்பு உள்ளது.
கேள்வி: கூட்டணிக்காக தி.மு.க. அழைப்பு விடுத்தால் பாஜக அது குறித்து பரிசீலிக்கும் என அக்கட்சித் தலைவர்களில் ஒருவரான நிர்மலா சீதாராமன் கூறியுள்ளாரே... பாஜகவிடம் இருந்து கூட்டணிக்கான அழைப்பு வந்தால்...
கருணாநிதி: பா.ஜ.கவுடன் கூட்டணி அமைப்பது குறித்து நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை; ஆனால் பா.ஜ.கவிடம் இருந்து அழைப்பு வந்தால் அது குறித்து தி.மு.க. முடிவு செய்யும்.
கேள்வி: லோக்பால் மசோதாவை ராஜ்யசபாவில் தாக்கல் செய்யும்போது தி.மு.க. நிலைப்பாடு என்ன?
கருணாநிதி: இதுபற்றி டி.ஆர்.பாலு அறிவுறுத்தப்பட்டுள்ளார். மசோதா விவாதத்துக்கு வரும்போது தி.மு.க. முடிவு தெரிய வரும்.












Click it and Unblock the Notifications