திமுக ஆட்சி காலத்தில் கோவில் நிர்வாகம் மோசம்! அறநிலையத்துறை விழிக்குமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் நான்கு ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் திமுக அரசின் மீது, இந்து மதத்திற்கு எதிரான அரசியல் செய்வதாகவும், கோவில்களை மோசமாக நிர்வகிப்பதாகவும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அறநிலையத்துறை (HR&CE) கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் அவல நிலை, பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாமை, மற்றும் திமுக தலைவர்களின் சர்ச்சைக்குரிய கருத்துகள் ஆகியவை பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன.

கோவில்களின் மோசமான மேலாண்மை தமிழகத்தில் 44,121 கோவில்கள் HR&CE துறையின் கீழ் உள்ளன. இவற்றில் 500 மற்றும் 1000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான பல கோவில்கள் உரிய பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து வருகின்றன. கட்டிடங்கள் சிதிலமடைந்து, சுகாதாரமற்ற சூழல் நிலவுவதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

உதாரணமாக, திருச்சியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்தது, கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையிலும், கழிவுநீர் கோவிலுக்குள் வரும் நிலையிலும் உள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.

HR&CE துறையின் 2022-23 கொள்கை குறிப்பின் படி, தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள் 4.78 லட்சம் ஏக்கர் நிலம் மற்றும் 22,600 கட்டிடங்களை சொந்தமாக வைத்துள்ளன. இவ்வளவு சொத்துக்கள் இருந்தபோதிலும் அந்த சொத்துக்களில் இருந்து, ஜூலை 1, 2022 முதல் மார்ச் 31, 2023 வரை வசூலான மொத்த வாடகை வெறும் 117.63 கோடி ரூபாய் மட்டுமே.

temple dmk mk stalin

கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு மற்றும் நிதி மோசடி

மாநில அரசு கோவில் நிலங்களை மீட்பதாக அறிவித்த போதிலும், பல கோவில்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மற்றும் சொத்துக்கள் தனிநபர்கள், அதிகாரிகள் மற்றும் அரசு துறைகளாலேயே ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலியில் உள்ள ஸ்ரீ வரகுணபாண்டீஸ்வரர் கோவில் மற்றும் ஸ்ரீ நெல்லையப்பர் கோவில் போன்றவை தங்களுக்குச் சொந்தமான பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கோவில் வருவாய்கள், நிலங்கள், தங்கம் போன்ற சொத்துக்கள் அரசு மற்றும் அதிகாரிகளால் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. கோவில் பூசாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படாத நிலையும் உள்ளது.

முன்னாள் காவல் அதிகாரி பொன் மாணிக்கவேல் ஒரு பேட்டியில், புள்ளமங்கை கோவில் (தஞ்சாவூர்) பூசாரிகளுக்கு மாதத்திற்கு ₹300 மட்டுமே சம்பளம் வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். CAG (இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர்) கூட கோவில் சொத்துக்கள் குறித்த ஆவணங்களை HR&CE துறை வெளியிட மறுப்பதாகவும், வருவாய் வீணடிப்பு மற்றும் நிதி மோசடி நடைபெறுவதாகவும் விமர்சித்துள்ளது.

பக்தர்களுக்கு போதிய வசதிகள் இல்லாமை, கூட்டம் மேலாண்மை

தமிழகத்தின் பல கோவில்களில் குடிநீர், சுத்தமான கழிவறைகள், போதிய நிழல் தரும் பகுதிகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில் நெரிசலைக் கட்டுப்படுத்த முறையான ஏற்பாடுகள் செய்யப்படுவதில்லை. இதனால் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் கோவிலுக்குள் செல்ல சிரமப்படுகின்றனர். கோவில் வளாகங்கள் குப்பைகள், நீர் தேக்கம், பழுதடைந்த கட்டிடங்கள் போன்றவற்றால் பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

சமீப காலமாக, கோவில் விழாக்களில் கூட்ட மேலாண்மை சரியாக இல்லாததால் பக்தர்கள் அடிதடி போடுவது, மயக்கமடைந்து விழுவது, சாப்பாடு கிடைக்காமல் நீண்ட நேரம் காத்திருப்பது போன்ற சம்பவங்களும் நடந்துள்ளன.

திருவண்ணாமலை, திருச்செந்தூர் திருக்கோவில்கள் இதற்கு உதாரணங்கள். இதுபோல பல கோவில்களை வரிசைப்படுத்த முடியும். HR&CE துறை கோவில் விழாக்களில் பாதுகாப்பு மற்றும் கூட்டம் மேலாண்மைக்கு போதிய முன்னேற்பாடுகள் செய்வதில்லை என்பதே முக்கிய விமர்சனமாக உள்ளது. சில கோவில்களில் அதிகாரிகள், பணத்தை பெற்றுக்கொண்டு சிறப்பு தரிசனங்களுக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.

நம்மிடம் பேசிய, திருவண்ணாமலையை சேர்ந்த ஒரு ஆட்டோ டிரைவர் ஒருவர், கூறுகையில், அண்ணாமலையார் திருக்கோவிலில் இலவச தரிசனமும், 50 ரூபாய்க்கான சிறப்பு தரிசனமும் மட்டுமே அறநிலையத்துறையால் அனுமதிக்கப்படுகிறது. எனவே கூட்டம் அலைமோதுகிறது. கிழக்கு கோபுரம் வழியாக மட்டுமே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். இங்கே கூட்டம் அதிகமாக இருப்பதால், சில அதிகாரிகள், வடக்கு உள்ளிட்ட பிற கோபுர வாசல்களில் ஒரு பக்தருக்கு ரூ.500 முதல் ரூ.1000 வரை வசூலித்துவிட்டு கோவிலுக்குள் அனுப்பி வைக்கிறார்கள்.

அரசே 100 ரூபாய், 500 ரூபாய், 1000 ரூபாய்க்கான தரிசன வாசல்களை திறந்தால் இந்த பணம் அரசுக்கு போகும். பக்தர்களும், கோவிலுக்குதானே செல்கிறது என்று மகிழ்ச்சியாக தருவார்கள். ஆனால், சிலர் மட்டும் பணத்தை வாங்குவது எப்படி சரியாக இருக்கும். இது என்ன நிர்வாகம் என்று அங்கலாய்த்தார்.

திமுக தலைவர்களின் இந்து எதிர்ப்பு கருத்துகள்

திமுக தலைவர்கள் பலர் இந்து மதம் மற்றும் சனாதன தர்மம் குறித்து வெளிப்படையாக எதிர்ப்பு கருத்துகளை வெளியிட்டுள்ளனர். இது இந்து அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது."சனாதன தர்மம் டெங்கு, மலேரியா, கொரோனா போன்ற நோய்கள். இதை எதிர்த்துப் போராடுவதை விட, இதை ஒழிப்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும்," என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜக மற்றும் இந்து அமைப்புகள் இதை இந்து மதத்திற்கு எதிரான தாக்குதல் என்று கடுமையாக எதிர்த்தன.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. ராஜா: "இந்து மதம் இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகத்திற்கே ஒரு ஆபத்து. இந்தியா குலம், வருணம், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு காரணம்," என்று அவர் தெரிவித்த கருத்துக்களும் பெரும் கண்டனத்திற்கு ஆளானது.

முதலமைச்சர் ஸ்டாலின்: "சனாதன தர்மம், வர்ணாசிரமம் போன்றவை சமத்துவத்துக்கு எதிரானவை. இவற்றை எதிர்க்கிறோம்," என்று இவர் வெளியிட்ட கருத்துகளும் இந்து அமைப்புகளால் விமர்சிக்கப்படுகின்றன. அது மட்டுமல்ல, இந்து மத திருமணங்களின்போது சொல்லப்படும் சமஸ்கிருத மந்திரங்களின் அர்த்தத்தை கேட்டால் உடலே நடுங்கும் என்றும், ஸ்டாலின் ஒருமுறை பேசினார். அந்த வீடியோ பலமுறை சோஷியல் மீடியாவில் வைரலாகி, இந்துக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்தான், மதுரை ஆதீனம் உள்ளிட்ட பல இந்து அமைப்புகள், திமுக அரசின் இந்து எதிர்ப்பு அரசியலை கடுமையாக விமர்சித்துள்ளன. திமுக அரசின் கோவில் மேலாண்மை, பக்தர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் மற்றும் இந்து மதம் குறித்த திமுக தலைவர்களின் கருத்துகள் ஆகியவை பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவால் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன.

கோவில் மேலாண்மை மற்றும் பக்தர்கள் வசதிகள் குறித்து அடிக்கடி புகார்கள் எழுந்துள்ள நிலையில், திமுக தலைவர்களின் இந்து எதிர்ப்பு கருத்துக்கள் மாநில அரசியலில் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+