காவிரி: சென்னையில் 30 இடங்களில் மறியல்: திமுகவினர் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இன்று முதல் 3 நாட்களுக்கு தொடர் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இன்று திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சென்னையில் 30 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6 வாரங்கள் காலஅவகாசம் கொடுத்தும் மத்திய அரசு அதை செயல்படுத்தவில்லை. இதனால் தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க தவறிய மத்திய அரசை கண்டித்து ஏப்ரல் 2-ஆம் திமுக உள்ளிட்ட கட்சிகளும், ஏப். 3 -ஆம் தேதி அதிமுகவும் போராட்டத்தை அறிவித்துள்ளன.

அனைத்து கட்சி கூட்டம்
இந்நிலையில் காவிரி விவகாரத்தில் தமிழக அரசும் எதிர்க்கட்சிகளும் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து விவாதிப்பதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

காவிரிக்காக போராட்டம்
இந்த கூட்டம் நடைபெற்ற உடன் ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் திடீரென சென்னை வள்ளுவர் கோட்டத்துக்கு சென்றனர். அங்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அனைத்து கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

30 இடங்களில்
இதைத் தொடர்ந்து சாலை மறியிலில் ஈடுபட்ட திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் தலைவர்களை போலீஸார் கைது செய்து விடுவித்தனர். இந்நிலையில் இன்று சென்னையில் 30 இடங்களில் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அஞ்சல் நிலையம்
சென்னை அண்ணா சாலையில் எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட திமுகவினரை போலீஸார் கைது செய்தனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள அஞ்சல் நிலையத்தில் பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காவிரி போராட்டம்
எழும்பூர், திருவான்மியூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications