ஆர்.கே.நகரில் சுணக்கம் காட்டும் திமுக.. வெல்லும் வாய்ப்பை வீணடித்துவிடுமா?
ஆர்.கே.நகரில் எல்லா நிர்வாக பொறுப்புகளையும் ஸ்டாலினே பார்க்க வேண்டியுள்ளது, பிரசாரத்திலும் அவரையே திமுக முழுக்க சார்ந்துள்ளது.
சென்னை: மத்திய அரசால் ஏகப்பட்ட இடைஞ்சல்கள், கட்சி முடக்கம், கட்சி சின்னம் முடக்கம் என எத்தனையோ இருந்தாலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் அணி தீயாய் வேலை பார்த்து வருகிறது.
அவர்களுக்கு சற்றும் சளைக்காமல் சென்டிமென்ட் பிரசாரங்கள், அதிரடி புகார்களை அள்ளி வீசுவது என ஓ.பி.எஸ் அணியும் பரபரப்பாக உள்ளது. வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா அணிகளுக்கு நடுவேயான போட்டியாகத்தான் இது தெரிகிறது.
ஆனால் அல்வா போல ஒரு வாய்ப்பு கிடைத்தும் திமுகவின் தேர்தல் பிரசாரம் சுணக்கமாகவே உள்ளது. தினகரனை எதிர்கொள்ளும் வகையில் தி.மு.க.செயல்படவேண்டும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலினுக்கு தொண்டர்கள் கோரிக்கைவிடுக்க தொடங்கியுள்ளனர்.

கள நிலவரம்
திமுகவின் செயல்பாடு சில விஷயங்களில் முந்தைய தேர்தல்களைவிட வேகமாக இருந்தாலும் ஆளுங்கட்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் இல்லை என்கிறது கள நிலவரம்.

பிரசாரம்
தேர்தல் பிரச்சாரத்துக்கு வரும் தலைமைக்கழகப் பேச்சாளர்களுக்கு வாகனங்கள் ஏற்பாடு செய்து கொடுப்பது, பிரசாரத்திற்கு போலீசாரிடம் அனுமதி பெற்றுக் கொடுப்பது போன்ற ஏற்பாடுகளில் கூட தொய்வு உள்ளதாம். இதையெல்லாம் நிர்வாகிகள் முறையாக செய்யாமல், பேச்சாளர்களைக் காத்திருக்கவைத்து திருப்பி அனுப்பும் நிகழ்வுகள் தொடர்கின்றன.

ஸ்டாலின் கவனத்திற்கு
பிரச்சாரப் பொறுப்பாளர், கட்சி வக்கீல்கள் தொடங்கி, மாவட்டச்செயலாளர் வரை பேச்சாளர்கள் புகார் தெரிவித்து பார்த்துவிட்டனர். ஆனால் யாரும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குமுறல் வெளிப்படுகிறது. இதனால் நேரடியாக ஸ்டாலினுக்கே இப்பிரச்சினையை கொண்டு செல்ல திமுக பேச்சாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அனைத்தும் ஒருவரே
ஆர்.கே.நகரில் எல்லா நிர்வாக பொறுப்புகளையும் ஸ்டாலினே பார்க்க வேண்டியுள்ளது, பிரசாரத்திலும் அவரையே திமுக முழுக்க சார்ந்துள்ளது. இந்த சூழ்நிலையில் கட்சி வேகம் எடுக்காவிட்டால் ஜூ.வி. சர்வே கூறியதை போல திமுக இங்கு தோல்வியைத்தான் தழுவ வேண்டிவரும் என்பதே நிதர்சனம்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications