தேர்தல்.. தமிழகத்தில் அதிமுகவுக்கு- 28, திமுகவுக்கு 5. காங்.-1,: டைம்ஸ் நவ் கருத்து கணிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தல் தற்போது நடைபெற்றால் தமிழகத்தில் அதிமுக 28. திமுக 5, காங்கிரஸ் 1 தொகுதியையும் கைப்பற்றும் என்று டைம்ஸ் நவ்- சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தலையொட்டி ஏராளமான கருத்துக் கணிப்புகள் கடந்த சில மாதங்களாக வெளியாகி வருகின்றன. கடந்த ஜூலை மாதம் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும் சி வோட்டரும் இணைந்து இந்தியா முழுவதும் கருத்துக் கணிப்பை நடத்தியிருந்தன.

அதில் பாரதிய ஜனதா கட்சி 131 இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிவித்திருந்தது. தற்போது பாஜக மட்டும் 162 தொகுதிகளைக் கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கிய மாநிலங்களில் எந்தெந்த கட்சிகள் எவ்வளவு தொகுதிகளைக் கைப்பற்றக் கூடும் என்ற விவரமும் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகம் (39 தொகுதிகள்)

தமிழகம் (39 தொகுதிகள்)

தமிழகத்தில் தற்போது தேர்தல் நடைபெற்றால் 39 தொகுதிகளில் அதிமுக 28, திமுக 5, காங்கிரஸ்-1 தொகுதிகளையும் இதர கட்சிகள் 5 தொகுதிகளையும் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் அதிமுகவுக்கு 29, திமுகவுக்கு5, காங்கிரசுக்கு 1 தொகுதிகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

2009ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக 9, திமுக 18, காங்கிரஸ் 8 தொகுதிகளையும் இதர கட்சிகள் 4 தொகுதிகளையும் கைப்பற்றியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரப்பிரதேசம்(80 தொகுதிகள்)

உத்தரப்பிரதேசம்(80 தொகுதிகள்)

இம்மாநிலத்தில் பகுஜன் சமாஜ்கட்சி 31, சமாஜ்வாடி 25, பாரதிய ஜனதா 17, காங்கிரஸ் 5 தொகுதிகளைக் கைப்பற்றும் என்று தற்போதைய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் சமாஜ்வாடிக்கு 33, பகுஜன் சமாஜுக்கு 27, பாஜகவுக்கு 12, காங்கிரஸுக்கு 5 தொகுதிகள் கிடைக்கும் என்று கூறப்பட்டிருந்தது.

2009ஆம் ஆண்டு தேர்தலில் பகுஜன் 20, சமாஜ்வாடி 23, பாஜக 10, காங்கிரஸ் 21 தொகுதிகளைக் கைப்பற்றியிருந்தன.

மகாராஷ்டிரா (48 தொகுதிகள்)

மகாராஷ்டிரா (48 தொகுதிகள்)

மகாராஷ்டிராவில் சிவசேனா 14, பாஜக 13, காங்கிரஸ் 11, தேசியவாத காங்கிரஸ் 6 இடங்களைக் கைப்பற்றும் என்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாத கருத்துக் கணிப்பில் சிவசேனாவுக்கு 15, காங்கிரஸ், பாஜகவுக்கு தலா 11 இடங்களும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 6 இடங்களும் கிடைக்கும் என்று கூறப்பட்டிருந்தது.

2009ஆம் ஆண்டு தேர்தலில் சிவசேனா 11, பாஜக 9, காங்கிரஸ் 17, தேசியவாத காங்கிரஸ் 8 இடங்களைக் கைப்பற்றியிருந்தன.

ஆந்திரா (42 தொகுதிகள்)

ஆந்திரா (42 தொகுதிகள்)

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 13, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 13, தெலுங்குதேசம் 8, காங்கிரஸ் 7 இடங்களைக் கைப்பற்றும் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை கருத்துக் கணிப்பில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 14, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 11, தெலுங்குதேசம் 9, காங்கிரஸ் 7 தொகுதிகளில் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

2009ஆம் ஆண்டு தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 2, தெலுங்குதேசம் 6, காங்கிரஸ் 33 தொகுதிகளில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்கம் (42 தொகுதிகள்)

மேற்கு வங்கம் (42 தொகுதிகள்)

இம்மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 23, இடது முன்னணி 16, காங்கிரஸ் 3 தொகுதிகளில் வெல்லும் என்று தற்போதைய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. ஜூலை மாத கருத்துக் கணிப்பில், திரிணாமுலுக்கு 22, இடதுமுன்னணிக்கு 17, காங்கிரசுக்கு 2 என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த லோக்சபா தேர்தலில் திரிணாமுல் 19, இடது முன்னணி 15, காங்கிரஸ் 6 தொகுதிகளில் வென்றிருந்தன.

பீகார் (40 தொகுதிகள்)

பீகார் (40 தொகுதிகள்)

பீகாரில் பாஜக 14, ராஷ்டிரிய ஜனதா தளம் 14, ஐக்கிய ஜனதா தளம் 9, காங்கிரஸ் 1 தொகுதியில் வெல்லும் என்கிறது தற்போதைய கருத்துக் கணிப்பு. ஜூலை கருத்துக் கணிப்பில், பாஜக -14, ராஷ்டிரிய ஜனதா தளம்-12, ஐக்கிய ஜனதா தளம் 11, காங்கிரஸ்-1 என்று கூறப்பட்டிருந்தது.

2009ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு 12, ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு 4, ஐக்கிய ஜனதா தளத்துக்கு 20, காங்கிரஸுக்கு 2 தொகுதிகள் கிடைத்தன.

மத்திய பிரதேசம்(29 தொகுதிகள்)

மத்திய பிரதேசம்(29 தொகுதிகள்)

மத்திய பிரதேசத்தில் பாஜக 23, காங்கிரஸ் 6 தொகுதிகளில் வெல்லும் என்கிறது தற்போதைய கருத்துக் கணிப்பு. ஜூலை மாத கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 16, காங்கிரஸுக்கு 12 இடங்களும் கிடைக்கும் என்று கூறப்பட்டிருந்தது.

2009 தேர்தலில் பாஜகவுக்கு 16, காங்கிரஸுக்கு 12, பகுஜன் சமாஜ் கட்சிக்கு 1 இடம் கிடைத்திருந்தது.

கர்நாடகா(28 தொகுதிகள்)

கர்நாடகா(28 தொகுதிகள்)

இங்கு காங்கிரஸ் கட்சிக்கு 13, பாஜகவுக்கு 12, மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 3 தொகுதிகள் கிடைக்கும் என்று தற்போதைய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலையில் நடத்தப்பப்ட்ட கருத்துக் கணிப்பில் காங்கிரஸுக்கு 17, பாஜகவுக்கு 8, மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 3 தொகுதிகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

2009 தேர்தலில் காங்கிரஸுக்கு 6, பாஜகவுக்கு 19, மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு3 தொகுதிகள் கிடைத்திருந்தன.

குஜராத்(26 தொகுதிகள்)

குஜராத்(26 தொகுதிகள்)

குஜராத்தில் பாஜகவுக்கு 22, காங்கிரஸ் கட்சிக்கு 4 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்கிறது கருத்துக் கணிப்பு. ஜூலையில் நடத்தப்பட்டதிலோ பாஜகவுக்கு 21, காங்கிரஸுக்கு 5 தொகுதிகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இம்மாநிலத்தில் 2009-ல் பாஜகவுக்கு 15, காங்கிரஸூக்கு 11 தொகுதிகள் கிடைத்தன.

ராஜஸ்தான்(25 தொகுதிகள்)

ராஜஸ்தான்(25 தொகுதிகள்)

25 தொகுதிகளில் பாஜக 19, காங்கிரஸ் 5 தொகுதிகளைக் கைப்பற்றுமாம். ஜூலையில் பாஜகவுக்கு 15, காங்கிரஸுக்கு 9 கிடைக்கும் என்று கூறப்பட்டிருந்தது.

2009 தேர்தலில் பாஜகவுக்கு 4, காங்கிரஸுக்கு 20 தொகுதிகள் கிடைத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+