கனிமொழி பிறந்த நாளை ஒரு வாரம் கொண்டாடும் திமுக வழக்கறிஞர்
சென்னை: திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழியின் பிறந்த நாளை ஒரு வாரத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் கொண்டாட திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞரும், மாஜி கவுன்சிலருமான ருக்மாங்கதன் ஏற்பாடு செய்துள்ளார்.
ஜனவரி 3ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு இந்தக் கொண்டாட்டம் நடைபெறுகிறது. ஜனவரி 5ம் தேதி கனிமொழியின் பிறந்த நாளாகும்.
நலத் திட்ட உதவிகள் வழங்குவது, வக்கீல்களுக்கு சீருடை வழங்குவது என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வழக்கறிஞர் ருக்மாங்கதன் ஏற்பாடு செய்துள்ளார்.

இன்று கேக் வெட்டி
இன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஆவின் அருகே மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி தலைமையில் கேக் வெட்டப்படுகிறது.

நாளை ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை
4ம் தேதி எழும்பூர் நெடுஞ்சாலையில் ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கும் விழா, 105வது வட்ட திமுக பகுதி பிரதிநிதி தமிழரசு தலைமையில் நடைபெறுகிறது.

5ம் தேதி ஏழைப் பெண்களுக்கு இலவச சேலை
நேரு பூங்கா குடிசை மாற்று வாரியத்தில் 72வது வட்ட திமுக துணை செயலாளர் கருணாகரன் தலைமையில் 5ம் தேதி ஏழை, பெண்களூக்கு இலவச சேலை வழங்கப்படுகிறது.

7ம் தேதி வக்கீல்களுக்கு இலவச சீருடை
சேத்துப்பட்டு ஆதரவற்ற மகளிர் இல்லத்தில் 6ம் தேதி பெண்களூக்கு இலவச சேலை வழங்கப்படும். எழும்பூர் கோர்ட்டில் வக்கீல் சுகுமார் தலைமையில் வக்கீல்களுக்கு 7ம் தேதி சீருடை வழங்கப்படுகிறது.

8ம் தேதி பொற்கிழி
சைதாப்பேட்டை கோர்ட் முன்பு 8ம் தேதிவக்கீல் பிரேம்சந்தர் தலைமையில் மாணவர்களுக்கு புத்தக பையும் எழும்பூரில் திமுக முன்னோடிகளூக்கு பொற்கிழியும் வழங்கப்படுகிறது.

9ம் தேதி கண் சிகிச்சை மையம்
9ம் தேதி 106 வது வட்ட திமுக துணை செயலாளர் மஸ்தான் தலைமையில் கண்சிகிச்சை முகாம் நடக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications