மதுரை அதிமுக வேட்பாளர் மீது திமுக வழக்கறிஞர்கள் புகார்
மதுரை: மதுரை அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் மீது திமுக வழக்கறிஞர்கள் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர்.
மதுரை அதிமுக வேட்பாளராக மதுரை மாநகராட்சி துணை மேயர் கோபாலகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து கடந்த மூன்று நாட்களாக அதிமுக முன்னணி நிர்வாகிகள் சகிதம் கோபாலகிருஷ்ணன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
இந்த நிலையில் நேற்று மதுரையில் ஒரு கிறிஸ்துவ தேவாலயத்திற்கும், அங்கு உள்ள ஒரு பள்ளிக்கூடத்திற்கும் சென்ற அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக திமுக தரப்பில் குற்றம் சாட்டப்படுகின்றது.
இதனால் தேர்தல் விதிமுறையை மீறிய அதிமுக வேட்பாளர் கோலாகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று திமுக வழக்கறிஞர்கள் அன்புநிதி மற்றும் முத்துவெங்கடேசன் ஆகியோர் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சுப்பிரமணியத்திடம் மனு அளிக்க முயன்றனர்.
ஆனால் நேர்முக உதவியாளர் மூலம் மனுவை மாவட்ட தேர்தல் அதிகாரியான சுப்பரமணியம் பெற்றுக் கொண்டார். மேலும், இந்த விவகாரம் குறித்து மாநில தலைமை தேர்தல் ஆணையத்திற்கும், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கும் திமுகவினர் புகார் மனுவை அனுப்பி வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications