For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தலைமை நீதிபதி இல்லம் வந்த டிராபிக் ராமசாமி வழக்கறிஞர்.. போலீசாருடன் திமுக வழக்கறிஞர்கள் வாக்குவாதம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    மெரினாவில் இடம் கோரி திமுக தொடர்ந்த வழக்கு காலை 8 மணிக்கு ஒத்திவைப்பு

    சென்னை: மெரினா கடற்கரையில் திமுக தலைவர் மறைந்த கருணாநிதியை அடக்கம் செய்ய இடம் அளிக்க முடியாது என்று தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து திமுக சார்பில் உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷ் முன்னிலையில் மனு அளிக்கப்பட்டது.

    DMK lawyers quarrel with police for allowing inside Acting CJ’s residence advocate Ganesan

    இதையடுத்து ஹுலுவாடி ரமேஷ் இல்லத்தில், ஹுலுவாடி ரமேஷ் மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு இது விசாரிக்கப்ட்டு வருகிறது.

    வழக்கறிஞர் துரைசாமி, பாமக வழக்கறிஞர் பாலு ஆகியோர் மெரினா கடற்கரை பகுதியில் நினைவிடங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்று விட்டனர். ஆனால் டிராபிக் ராமசாமி தரப்பில் வழக்கு வாபஸ் பெறப்படவில்லை.

    மேலும் நினைவிடம் அமைக்க டிராபிக் ராமசாமி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது டிராபிக் ராமசாமி தரப்பு வழக்கறிஞர் கணேசன் நீதிபதி இல்லத்திற்கு வந்து தங்கள் தரப்பு கருத்தை எடுத்துரைத்தார்.

    தொடர்பில்லாமல் இவரை நீதிபதி இல்லத்தின் உள்ளே அனுமதித்திருக்கக் கூடாது என்று பொலீசாருடன் திமுக வழக்கறிஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் நீதிபதியின் இல்லம் அமைந்துள்ள பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    English summary
    DMK lawyers quarrel with police for allowing inside Acting CJ’s residence advocate Ganesan, representing activist Traffic Ramasamy who wants to reportedly oppose plea for space in Marina for Karunanithi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X