திமுகவை யாராலும் அசைக்க முடியாத அளவிற்கு பணிகளை செய்து முடிப்பேன் - கருணாநிதி
சென்னை: திமுகவை யாராலும் யாராலும் அசைக்க முடியாது என்ற அளவுக்கு அனைத்து பணிகளையும் செய்து முடிப்பேன் என்று அக்கட்சி தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்துகொண்டு பேசியதாவது:- நான் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சிப் பணி ஆற்றி வருகிறேன். ஆற்ற வேண்டிய தொண்டை ஆற்றுவேன்.

தொடர்ந்து இயக்கத்தை கட்டிக் காப்பேன். பல இழப்புகளையும் தாண்டி இந்த இயக்கத்தை தொண்டர்கள் கட்டிக் காத்து வருகின்றனர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டமன்றத்தில் நாம் குரல் எழுப்பியிருக்கிறோம். தொடர்ந்து கட்சியை வளர்க்க அனைவரும் பாடுபடவேண்டும்.
பெரியாரின் எண்ணங்கள், அண்ணாவின் கொள்கைகள் என்றைக்கும் இந்த இயக்கத்தை வழிநடத்தும். நாம் தோல்வியை சந்தித்து இருந்தாலும் அடுத்த வெற்றியை நோக்கி பயணிக்க இருக்கிறோம். நீ பெரியவனா, நான் பெரியவனா? என்ற குழப்பங்களை தவிர்த்து அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கவேண்டும்.
உடலும் மனமும் வலிமை பெற்று தமிழக மக்களுக்காக சிறப்பாக பணியாற்றுவேன். தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது என்ற அளவுக்கு அனைத்து பணிகளையும் முடிப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications