கடந்த 28ஆம் தேதி முதல் காவேரி மருத்துவமனையில் கருணாநிதி.. இதுவரை நடந்தது என்ன?
கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
Recommended Video

சென்னை: கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஜூலை 27ஆம் தேதி - ரத்த அழுத்தம் குறைவு காரணமாக கடந்த 27ஆம் தேதி நள்ளிரவில் ஆம்புலன்ஸ் மூலம் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் கருணாநிதி.
ஜூலை 28ஆம் தேதி- திரைத்துறையினர் அரசியல் கட்சியினர் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்து வருகின்றனர்.

ஜூலை 29ஆம் தேதி - கருணாநிதியின் உடல்நிலை மோசமடைந்தது. ஏராளமான போலீசார் மருத்துவமனை வளாகத்தில் குவிக்கப்பட்டனர். தொண்டர்களும் முழக்கமிட்டப்படி மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர்.
ஜூலை 30 ஆம் தேதி- அதிகாலை காவேரி மருத்துவமனைக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் முதன்மை செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் வருகை தந்தனர்.
ஜூலை 30ஆம் தேதி - காலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திமுக தலைவர் கருணாநிதியை ஐசியூவில் நேரடியாக பார்த்தனர்.
ஜூலை 31ஆம் தேதி - காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, காவேரி மருத்துவமனைக்கு சென்று ஸ்டாலினிடம், கருணாநிதியின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார்.
ஜூலை 31ஆம் தேதி -டேராடூனில் இருந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தார். பின்னர், மு.க.ஸ்டாலினிடம் கருணாநிதி உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
ஆகஸ்டு 1ஆம் தேதி - கருணநிதி உடல்நிலை சீராக உள்ளது. திமுக தொண்டர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளக்கூடாது என ஸ்டாலின் அறிக்கை. நடிகர் விஜய் காவேரி மருத்துவமனையில் நலம் விசாரித்தார்.
ஆகஸ்டு 2 ஆம் தேதி- திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதால் தொண்டர்கள் ஊருக்கு திரும்ப வேண்டும் என கனிமொழி எம்பி வேண்டுகோள் விடுத்தார்.
ஆகஸ்டு 2 ஆம் தேதி- திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை காவேரி மருத்துவமனையில் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரிடம் நலம் விசாரித்தார்.
ஆகஸ்டு 4ஆம் தேதி - காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.
ஆகஸ்டு 5 -காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மருத்துவமனையில் நேரில் விசாரித்தார்.
ஆகஸ்டு 6 - காலை முதல் கருணாநிதியின் குடும்பத்தினர் காவேரி மருத்துவமனையில் குவிந்தனர். கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
-
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
தேவர் Vs தேவர் மகன்.. திண்டுக்கல் சீனிவாசனை எதிர்க்கும் ஐபி செந்தில்குமார்! வரலாறு படைக்குமா திமுக? -
திமுகவையும் விடாத பிரேமலதா.. 3 சிட்டிங் எம்எல்ஏக்களை கைவிட ஸ்டாலினுக்கு அழுத்தம்.. புது தலைவலி -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
விசிகவுக்கு திருப்போரூர், பெரியகுளம் உள்பட 8 தொகுதிகள்! உத்தேச பட்டியல் வெளியீடு! -
கட்டுக்கட்டாக பணம்.. சென்னையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் நிறுவன காரில் ரூ.60 லட்சம் பறிமுதல் -
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.! -
கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த வேலுமணி.. அதிமுகவுக்கு தாவிய திமுக கவுன்சிலர்! -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ் -
கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி.. கேம் சேஞ்சர் ஸ்டாலின்.. திமுக பக்கா ஸ்கெட்ச்












Click it and Unblock the Notifications