திமுக தலைகளுக்கும் மொய் விருந்து வைத்து வளைத்த அதிமுக அரசு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக எம்.எல்.ஏக்களை 'கவனித்த' எடப்பாடி அரசு இப்போது திமுக தலைகளுக்கும் 'மொய் விருந்து' வைத்து அசத்தி வருவதை அதிர்ச்சியுடன் பார்க்கிறது அக்கட்சி.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு திமுக தடலாடி அரசியல் நாடகங்களை எப்படியாவது நிறைவேற்றும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக இருந்தது. இதை திமுக தலைவர்கள் இன்னமும் பகிரங்கமாக சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

அதிமுக அரசுடன் நெருக்கம்

அதிமுக அரசுடன் நெருக்கம்

ஆனால் அதற்கு நேர்மாறாக ரொம்பவே ஆளும் அதிமுக அரசுடன் நெருக்கமாகவே பயணித்து வருகிறது திமுக. என்னதான் அறிக்கைகள், ஆர்ப்பாட்டங்கள் என காட்டிக் கொண்டாலும் கமுக்கமாக அதிமுகவுடன் திமுக கைகோர்த்து செயல்படுவதை நாமும் சுட்டிக்காட்டியிருந்தோம்.

எம்.எல்.ஏக்களுக்கு எச்சரிக்கை

எம்.எல்.ஏக்களுக்கு எச்சரிக்கை

தொடக்கத்தில் திமுக எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட்டது அதிமுக. இதனால் திமுக தலைமை அதிர்ச்சியடைந்து எம்.எல்.ஏக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.

திமுகவுடன் பேச்சுவார்த்தை

திமுகவுடன் பேச்சுவார்த்தை

இதனைத் தொடர்ந்து திமுக தலைகளையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் எடப்பாடி தரப்பு படுதீவிரமாக இறங்கியது. இதற்காக திமுக தலைமைக்கு மிக நெருக்கமான எம்.எல்.ஏ. ஒருவர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

மொய்விருந்து

மொய்விருந்து

தற்போது திமுக தலைகளை 'மொய் விருந்து' மூலம் தடபுடலாக 'கவனிக்க' தொடங்கிவிட்டது எடப்பாடி அரசு. இதை திமுகவினரே அதிர்ச்சியுடன் பார்க்கின்றனர் என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sources said that Senior DMK leaders also now joining hands with Senior Ministers of Edappadi Palanisamy Govt.
Please Wait while comments are loading...