ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக திமுக பணியாற்றும்: கருணாநிதி உறுதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகச் சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமான வகையில் நல்லதோர் எதிர்க்கட்சியாக மக்களின் பிரச்சினைகளை முன் வைத்து திமுக பணியாற்றும் என்ற நம்பிக்கையை தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தற்போது நடைபெற்ற 234 தொகுதிகளுக்கான தேர்தலில், அ.தி.மு.க. அணி 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்திலே தான் போட்டியிட்டன. தி.மு.க., காங்கிரஸ் கட்சிக்கு 41 இடங்களையும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 5 இடங்களையும், மனித நேய மக்கள் கட்சிக்கு 4 இடங்களையும், புதிய தமிழகம் கட்சிக்கு 4 இடங்களையும் அளித்தது போக எஞ்சிய 180 தொகுதிகளிலும் உதய சூரியன் சின்னம் தான் அ.தி.மு.க. வை எதிர்த்துப் போட்டியிட்டது.

திமுக

திமுக

இந்த 180 இடங்களில் கூட மக்கள் தே.மு.தி.க. கட்சிக்கு 3 இடங்களும், பெருந்தலைவர் மக்கள் கட்சி, சமூக சமத்துவப்படை, விவசாயத் தொழிலாளர் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு இடமும் அளித்தது போக 174 இடங்களில் தான் தி.மு.க. போட்டியிட்டது. அதிகாரப்பூர்வமாக 232 தொகுதிகளில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க. 134 இடங்களிலும், தி.மு.க. அணி 98 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த 98 இடங்களில், தி.மு.க. 89 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 8 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

நேரடி போட்டி

நேரடி போட்டி

தி.மு.க.வும், அ.தி.மு.க. வும் நேரடியாக போட்டியிட்ட 172 இடங்களில், தி.மு.க. 89 இடங்களிலும், அ.தி.மு.க. 83 இடங்களிலும் தான் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் ஒட்டுமொத்தமாக 232 தொகுதிகளில் 134 இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதாகக் கூறுகிறார்களே, அது எப்படி? காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 41 இடங்களில் 33 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி போட்டியிட்ட 5 இடங்களில் 4 இடங்களிலும், மனித நேய மக்கள் கட்சி போட்டியிட்ட 4 இடங்களிலும், புதிய தமிழகம் போட்டியிட்ட 4 இடங்களிலும், மக்கள் தே.மு.தி.க. போட்டியிட்ட 3 இடங்களிலும், மற்றும் தி.மு.க. ஆதரவோடு போட்டியிட்ட 3 கட்சிகள் போட்டியிட்ட 3 இடங்களிலுமாக 51 இடங்களில், அதாவது தி.மு. க.வின் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட 60 இடங்களில் 51 இடங்களை, அ.தி.மு.க. கைப்பற்றியுள்ளது.

கூட்டணி கட்சிகள்

கூட்டணி கட்சிகள்

தோழமைக் கட்சிகளைப் பற்றி குறை கூறுவதற்காக நான் இதையெல்லாம் சொல்கிறேன் என்று யாரும் தவறாக கருதிடக் கூடாது. அந்தக் கட்சியினரும் அப்படி நினைக்க வேண்டாம். தி.மு.க.வை இந்தத் தேர்தலில் வாக்காளர்கள் பெருவாரியாக ஆதரிக்கவே முனைந்தார்கள் என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவே இந்த விவரங்களைத் தெரிவிக்கிறேனே தவிர, கூட்டணிக் கட்சிகளை குறை கூறுவதற்காக அல்ல.

எதிர்க்கட்சி

எதிர்க்கட்சி

தமிழக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வலிமைவுடன் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியாகச் செயல்படக்கூடிய வாய்ப்பு தி.மு.க.விற்குக் கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பினை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி, தமிழகச் சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமான வகையில் நல்லதோர் எதிர்க்கட்சியாக மக்களின் பிரச்சினைகளை முன் வைத்துப் பணியாற்றும் என்ற நம்பிக்கையை தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+