Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தூக்கு தண்டனை ஒழிப்பு, பொருளாதாரக் கொள்கை, புதுவைக்கு முழு மாநிலத் தகுதி

Subscribe to Oneindia Tamil

38. தூக்கு தண்டனை ஒழிப்பு (Abolition of Death Sentence)

நாகரீகம் வளர்ந்துள்ள இருபத்தோறாம் நூற்றாண்டில், உலகின்

150 நாடுகளில் தடை செய்யப்பட்ட மரண தண்டனையை இந்திய அரசும் ஏற்று, இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டத்தில் உரிய திருத்தங்களை கொண்டு வந்து தூக்கு தண்டனையை அடியோடு ரத்து செய்ய வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

hanging rope

39. பொருளாதாரக் கொள்கை (Economic Policy)

விலைவாசிக் கட்டுப்பாடு, தொழில் துறையிலும் விவசாயத் துறையிலும் வேகமான வளர்ச்சி, சமுதாயத் துறைகளுக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு, அதன் வாயிலாக நாடெங்கும் கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், அனைவருக்கும் வேலைவாய்ப்பு, எல்லோருக்கும் வீட்டு வசதி, தனிநபர் வருமானத்தை அதிகப்படுத்தல், வறுமை ஒழிப்பு இவைதான் நாடு கடைப்பிடிக்க வேண்டிய பொருளாதாரக் கொள்கை.

"வறுமை ஒழிப்பு என்பது அறநெறிக் கோட்பாடு மட்டுமல்ல; அது ஒரு அடையக்கூடிய இலட்சியமே''

இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படைக் கட்டமைப்பாக இருந்து, அந்தந்தப் பகுதி மக்களின் வேலைவாய்ப்புத் தேவைகளை நிறைவு செய்வதற்கு பொதுத்துறை நிறுவனங்களே உறுதுணையாக இருந்தன. மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்து, சமுதாய வளர்ச்சிக்கும், சமமான பொருளாதார முன்னேற்றத்துக்கும் அடிப்படையாக அமைந்து இலாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படவும், இழப்புக்கு உள்ளாகும் பொதுத்துறை நிறுவனங்களை வலிவுடையனவாக சீரமைக்கவும், சிறப்புத் திட்டங்களை உருவாக்க வேண்டும்.

குறிப்பாக, தமிழகத்திலுள்ள பொதுத்துறை நிறுவனங்களான, இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ், ஐ.டி.பி.எல். ஆகியவற்றை எக்காரணம் கொண்டும் மூடவோ, தனியார் மயமாக்கவோ கூடாது எனவும், அவை தொடர்ந்து செயல்பட, உரிய முதலீடு செய்வதும் மற்றும் தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்துவதும் தேவை என வலியுறுத்துவோம். நெய்வேலி நிலக்கரி நிறுவனம் போன்ற மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்கிட வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்துவோம்.

மேலும், கேரள மாநிலத்திலுள்ள உர நிறுவனமான குஹஊகூ நிறுவனத்தில் மேலும் ஒரு அலகு அமைப்பதற்காக 8,000 கோடி ரூபாயினை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதேநேரத்தில், சென்னையில் உள்ள சென்னை உரத் தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு 4,800 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. கடந்த மூன்றாண்டு காலமாக தொடர்ந்து லாபத்தில் இயங்கி வரும் சென்னை உரத் தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு போதிய நிதிஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

கடந்த சில ஆண்டுகளாக பணவீக்கம் அதிகரிக்கும் போக்கு நிலவுகிறது. அதுபோலவே வெளிநாட்டுக் கடன்கள் திருப்பிச் செலுத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அரசின் கொள்கை முடிவுகளில், அரசு சாராத நிறுவனங்களின் தலையீடு அதிகரித்து, அதன் விளைவாக முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சம் தான் இதற்கு அடிப்படைக் காரணம் என்று தி.மு.கழகம் கருதுகிறது. எனவே, அரசின் கொள்கை முடிவுகளில், அரசு சாராத நிறுவனங்களின் தலையீட்டைக் கட்டுப்படுத்த உரிய முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள தி.மு.கழகம் வலியுறுத்தும்.

40. மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு

மத்திய அரசின் ஒட்டுமொத்த வரி வருவாயில் 60 விழுக்காட்டை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும்.

நிதிக்குழுவின் அமைப்பு மற்றும் ஆய்வு விதிகள் ஆகியன மாநிலங்களுக்கான மன்றத்தில் மட்டுமே முடிவு செய்தல் வேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்தும்.

41. புதுவைக்கு முழு மாநிலத் தகுதி

புதுவை நீண்ட நெடுங்காலமாகவே யூனியன் பிரதேசமாக இருந்து வருவதால், அதற்கு முழு மாநிலத் தகுதி தரப்பட வேண்டுமென்ற நம்முடைய கோரிக்கை வெற்றி பெற மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்துவோம்.

42. சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு

இந்திய நாட்டில் சுமார் 50 ஆயிரம் கோடி மதிப்புள்ளதும், மக்கள் தொகையில் இருபது கோடி மக்களுக்கு உணவு அளிப்பதுமான இந்தியாவின் சில்லரை வணிகத்தை, கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பரில் ஒற்றை இலச்சினை சில்லரை வணிகத்தில் நூறு விழுக்காடு அந்நிய முதலீட்டையும், பல இலச்சினை சில்லரை வணிகத்தில் 51 விழுக்காடும் அந்நிய நேரடி முதலீட்டை சில நிபந்தனைகளோடு மத்திய அரசு அனுமதித்தது.

ஆனால், தற்போது அந்த நிபந்தனைகளைத் தளர்த்தி அந்நிய முதலீட்டாளர்களுக்குப் பல்வேறு சலுகைகளை வழங்கிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தச் சலுகைகளைப் பயன்படுத்திக் கொண்டு அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் சில்லரை வணிகத்தில் இறங்குமானால், சில்லறை வணிகம் முற்றிலும் பாதிக்கப்பட்டு தங்களுடைய வாழ்வாதாரத்திற்கு, அதையே நம்பியிருக்கும் பல கோடி சிறு வணிகர்களும் பாதிப்புக்கு ஆளாகும் நிலைமை உருவாகும் என்பதை உணர்ந்து, சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை முற்றிலுமாகத் தடை செய்வதற்கு தி.மு.கழகம் பாடுபடும்.

43. உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டுச் சட்டம்.

மத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்த உள்ள உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டுச் சட்டம், பொருளாதாரத்தில் மிகவும் அடித்தட்டில் உள்ள சிறு, குறு வணிகர்களின் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய கடுமையான விதிகளை கொண்ட சட்டமாக அமைந்துள்ளது.

எனவே, உணவுத் தரத்தைக் கட்டுப்படுத்துவது தேவை என்றாலும், தற்போதுள்ள சட்டத்தைத் திரும்ப பெற்றுக் கொண்டு - சிறு, குறு வணிகர்களின் நலன் எந்த வகையிலும் பாதிக்காத அளவிற்கு, அவர்களுடன் கலந்துபேசி, புதிய சட்டத்தை உருவாக்கிட மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

44. கல்விக் கடன்கள் தள்ளுபடி

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பங்களைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், கல்விக் கடன் பெற்று, தங்கள் படிப்பை நிறைவு செய்துள்ளனர்; பலர் படிப்பைத் தொடர்ந்து வருகின்றனர். கல்வி நிலையங்களில் தங்கள் படிப்பை முடித்த மாணவர்களுக்கு, உடனடியாக வேலை கிடைக்காத நிலையில் அவர்கள் பெற்ற கல்விக் கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்த வங்கிகள் கடன் பெற்ற மாணவர்களின் குடும்பங்களை நிர்பந்தித்து வருகின்றன. மேலும், கடன் பெற்ற மாணவ - மாணவியரின் விவரங்களை பொது அறிவிப்பாகவும், வங்கிகள் வெளியிடுகின்றன. இதனால், மாணவர்களும் அவர்களது குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் மனரீதியாக பெரிதும் பாதிப்படைந்து சோர்வுற்றுள்ளனர். இத்தகைய மனிதாபிமானமற்ற அணுகுமுறையினை வங்கிகள் மாற்றிக் கொள்ளவும் - வங்கிகள் மாணவர்களுக்கு வழங்கிய கல்விக் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்யவும் தி.மு.கழகம் பாடுபடும்.

45.மாவட்டத் தலைநகரங்களில் சர்வதேச விளையாட்டரங்கம்.

இன்றைய இளைஞர்கள் சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கு உரிய தகுதிகளைப் பெறுவதற்கும் - பயிற்சி அளிப்பதற்கும் தேவையான நவீன உலகத் தரம் வாய்ந்த அடிப்படை கட்டுமானங்களை மாவட்டத் தலைநகரங்கள் தோறும் அமைத்திட, மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

46. அடிப்படைக் கட்டமைப்பு

அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கி, போக்குவரத்து, மின்சாரம், இணைப்புச் சாலை வசதிகள், நீர்வளம் ஆகியவற்றினை மேம்படுத்துவதற்கு வசதியாகப் புதிய தொழிற்கொள்கை வகுத்திட வலியுறுத்தப்படும்.

47. சென்னைத் துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம்

பொதுவாக தத்தமது மாநிலத்தின் நலன் விரும்பும் அரசுகள் மத்திய அரசிடமிருந்து தேவையான திட்டங்களைக் கேட்டுப் பெற்று செயல்படுத்துவதுதான் நடைமுறை. ஆனால், தலைவர் கலைஞர் தலைமையிலான தி.மு.கழக ஆட்சிக் காலத்தில், மத்திய அரசிடம் கோரிப் பெற்ற சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டத்தை, காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அ.தி.மு.க. அரசு முடக்கி வைத்தது கண்டனத்திற்குரிய ஒன்றாகும். தற்போது சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டு, அத்திட்டத்தை நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளது. அதன்படி அந்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நேரத்தில், தமிழக அரசு தொடர்ந்து இந்தத் திட்டத்தை நிறைவேற்ற விடாமல், உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறார்கள். எனினும் உச்ச நீதி மன்றம் தடையாணை ஏதும் வழங்கவில்லை. பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. எனவே இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்றிட வேண்டுமென்று மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

48. குளச்சல் துறைமுகம்

குளச்சல் துறைமுகம் இயற்கையாக அமைந்துள்ள ஒன்று. வளர்ந்து வரும் உலக வர்த்தகத்தால் சிங்கப்பூர், கொழும்பு துறைமுகங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படுவதால் கப்பல் நிறுத்த இடமின்றிக் காலதாமதம் ஏற்பட்டு, பன்னாட்டுக் கப்பல்கள் சிரமத்திற்கும் இழப்புக்கும் உள்ளாக்கப்படுகின்றன. வளர்ந்து வரும் சரக்குக் கப்பல் போக்குவரத்தை எதிர்கொள்வதற்கு குளச்சல் துறைமுகம் மிகவும் அவசியமாகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.கழக அரசு மேற்கொண்ட ஆய்வின்படி துறைமுகத்தின் அருகிலேயே கப்பல் போக்குவரத்திற்குத் தேவையான ஆழமான பகுதியைக் கொண்டிருப்பதால் அதிகச் செலவின்றிக் குளச்சல் துறைமுகத்தை பன்னாட்டுத் துறைமுகமாக நிறுவிட முடியும். கிழக்கே உள்ள நாடுகளுக்கும் மற்றும் மேற்கே உள்ள நாடுகளுக்கும் இந்தத் துறைமுகம் ஒரு நுழைவாயிலாக (ழுயவநறயல) விளங்கும்.

ஆகவே, குளச்சல் துறைமுகத்தை நவீன வசதிகள் கொண்ட பன்னாட்டுத் துறைமுகமாக மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு வலியுறுத்துவோம்.

49. தொழிலாளர் - பணியாளர் நலன்

மத்திய அரசின் தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம் தொழிலாளர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அமையவில்லை. இத்திட்டத்தை எதிர்த்து பல்வேறு தொழிற் சங்கங்களும் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இந்நிலையில் மத்திய அரசு, பணி ஓய்வு பெற்றோர் நலச் சங்கங்களுடன் அரசே மூன்றாண்டுகளுக்கு ஒரு முறையோ அல்லது ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறையோ பேச்சு வார்த்தை நடத்தி அவர்களுடைய ஓய்வூதிய உயர்வினை வழங்கிட வேண்டுமென தி.மு.கழகம் வலியுறுத்தும்.

அதுபோலவே புதிய அரசு ஊழியர் ஓய்வூதியத் திட்டமும், அரசு ஊழியர்களின் நலன்களுக்கு உகந்ததாக அமையவில்லை. எனவே, இத்திட்டம் குறித்தும் மத்திய அரசு மறு ஆய்வு செய்து, அரசு ஊழியர்கள் 2004ஆம் ஆண்டுக்கு முன்பு பெற்று வந்த சலுகைகள் குறையாத வகையில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள தி.மு.கழகம் பாடுபடும்.

தொழிலாளர்களுக்கான போனஸ் வழங்குவதற்கான அனைத்து உச்ச வரம்பினையும் முழுமையாக நீக்கிட வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

தொழிலாளர் நலத் திட்டங்கள் முறையாக நடைமுறைப் படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்காக தேசிய அளவில் கண்காணிப்பு ஆணையம் (சூயவiடியேட ஹரவாடிசவைல கடிச டுயbடிரச றுநடகயசந) ஒன்று அமைக்கப்பட தி.மு.கழகம் வலியுறுத்தும்.

50. கிராமப் புற அஞ்சல் தொழிலாளர்கள்

அஞ்சல் துறையில் பணிபுரியும் ஏறத்தாழ இரண்டரை இலட்சம் ஜி.டி.எஸ். தொழிலாளர்கள் அரசு ஊழியர்களாகவோ, தொழிலாளர் நலச் சட்டங்களின் அடிப்படையில் தொழிலாளர்களாகவோ கருதப்படாமலும், குறைந்த ஊதியத்தில் பணியாற்றுவதோடு, தொழிலாளர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் கிடைக்கும் பணிக்கொடை, ஓய்வூதியம், வைப்புநிதி போன்ற அனைத்து வகை சமூகப் பாதுகாப்புத் திட்டங்களையும் பெற இயலாதவர்களாகவும் பணியாற்றி வருகிறார்கள்.

இவர்களை பணி நிரந்தரம் செய்வதோடு, அவர்களுக்கு உரிய சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வற்புறுத்தும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+