For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தனிநபர் வருமான வரி உச்சவரம்பு விலக்கு, மகளிர் நலப்பணியாளர், சாலைப் பணியாளர் நியமனம்

By Mathi
|

51. அமைப்பு சாராத் தொழிலாளர் நலன்

கழக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் விவசாயக் கூலித் தொழிலாளர்கள், மரமேறுவோர், முடிதிருத்துவோர், கட்டுமானப் பணியாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், ஆட்டோ - டாக்சி ஓட்டுனர்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான கைவினைஞர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கென நலவாரியங்கள் உருவாக்கப்பட்டு, அந்த வாரியங்களின் உறுப்பினர்களான தொழிலாளர் எவரும் திடீரென மரணமடைந்தால், அவர்கள் குடும்பத்திற்கு ஒரு இலட்ச ரூபாய் நிதி - அவர்களின் பிள்ளைகளின் கல்விக்கு ரூ.2000த்திலிருந்து 6000 வரை உதவித் தொகை, பணிக்காலத்தில் விபத்துக்குள்ளாகும் எவரும் உடலுறுப்புகளை இழக்க நேரிட்டால், ரூ.50,000த்திலிருந்து ஒரு இலட்சம் வரை உதவித் தொகை, என்ற வகையில் வழங்குவதெற்கென ஒரு மாபெரும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதேபோன்ற திட்டத்தை இந்தியா முழுமைக்கும் விரிவுபடுத்தப் பாடுபடுவோம். மேலும், மத்திய அரசு இத்திட்டத்திற்காக நிலையான நிதியம் ஒன்றை (ஊடிசயீரள குரனே) ஏற்படுத்தி, அதற்கு உச்ச வரம்பு விதிக்காமல், மத்திய அரசே முழு செலவினங்களையும் ஏற்றுக் கொள்ளவேண்டுமென்று தி.மு.கழகம் வலியுறுத்தும்.

Money

52. அனைத்து இந்தியத் தொழிற் சங்கங்களின் பத்து அம்ச கோரிக்கை

இந்தியாவிலுள்ள தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவை உள்ளிட்ட அனைத்து மத்திய தொழிற் சங்கங்களும் இணைந்து கடந்த ஐந்து ஆண்டுகளாக பத்து அம்சத் திட்டத்தினை முன்வைத்து, தொடர்ந்து போராடி வருகிறார்கள். ஆனால், பல்வேறு போராட்டங்களை நடத்தியும், எந்தவித பயனும் கிடைக்கவில்லை. இதன் விளைவாக தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இந்த பத்து அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற தி.மு.கழகம் தொடர்ந்து பாடுபடும்.

53. தொழிலாளர் மருத்துவக் காப்பீடு

அனைத்து மாவட்டங்களிலும், தொழில் நகரங்களிலும் தொழிலாளர் மருத்துவக் காப்பீட்டு மையங்களை மத்திய அரசு தொடங்கிட தி.மு.கழகம் வலியுறுத்தும்.

54. ‘போனஸ்' திட்டம்

அரசுப் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் ‘போனஸ் தொகை'யினை

8.33 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாக உயர்த்திட, மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

55. வங்கி ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம்

அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களுடைய ஊதிய ஒப்பந்தம் 2012ஆம் ஆண்டு முதல் எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோதும், இதுவரைக் கையெழுத்திடப் படவில்லை.

மிக முக்கியமான இந்தப் பிரச்சினை குறித்து தி.மு.கழகம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, அதன் மூலம் ஒப்பந்தம் ஏற்படுத்திட வலியுறுத்தும்.

56. தனிநபர் வருமான வரி உச்சவரம்பு

ஆண்களின் மாத வருமானம் 50 ஆயிரம் வரையிலும் (அதாவது ஆண்டு வருமானம் ரூ. 6 இலட்சம் ) - பெண்கள் மாத வருமானம் 60 ஆயிரம் வரையிலும் (அதாவது ஆண்டு வருமானம் ரூ. 7.20 இலட்சம் ) இருந்தால், அந்த வருமானத்திற்கு வரிவிலக்கு அளித்திட வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

57. மூத்த குடிமக்களுக்கு வருமான வரி விலக்கு

அரசு பணிகளிலிருந்து ஓய்வு பெறும் அலுவலர்களுக்கு, ஓய்வு நாளில் வழங்கப்படும் ஓய்வூதியப் பணிக் கொடைக்கு வருமானவரி விலக்கு அளித்திட வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

மூத்த குடிமக்கள் ஐந்து ஆண்டுகள் வரை வைப்புத் தொகையாக ரூ.20 இலட்சம் வரை வைத்திருந்தால், அதில் வரும் வட்டிக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென மத்திய அரசை தி.மு.க. வலியுறுத்தும்.

58. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

படித்துவிட்டு வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்கள் தீவிரவாத திசைநோக்கித் திரும்பி, நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் பேராபத்து விளைவிப்பதைத் தடுத்து நிறுத்துவதற்காக பொருளாதாரக் கொள்கைகளிலும், தொழிற் கொள்கையிலும் உரிய மாற்றங்களை மேற்கொண்டு, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்களைப் பெருமளவில் உருவாக்க போர்க்கால அடிப்படையில் ஒரு சிறப்புத் திட்டத்தினைச் செயல்படுத்திடவும் அதற்கேற்ப தேவைப்படும் கல்வி மற்றும் தேவையான பயிற்சி மையங்கள் நாடு முழுதும் அமைத்திடவும் தி.மு.கழகம் வலியுறுத்தும்.

நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பினை உருவாக்குவதற்கெனத் தனி முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும். அரசுத் துறையில் புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதுடன், சுயவேலை வாய்ப்புத் திட்டங்கள் உருவாக்கல், புதிய தொழில் முனைவோரை ஊக்குவித்தல், சிறுதொழில் மற்றும் நுண்தொழில் துறைகளில் ஈடுபடுவோருக்கு ஊக்கமளித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தி.மு.க. வலியுறுத்தும்.

பெரும்பான்மையோர் வேலைவாய்ப்பு பெறுவதற்கும், வறுமையின் கொடுமை குறைவதற்கும் சிறுதொழில் மற்றும் கிராமத் தொழில்கள் ஆகியவற்றில் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்புக்களைப் பெற, சிறுதொழில் முன்னுரிமைப் பட்டியல் (ளுஅயடட ஐனேரளவசநைள ஞசiடிசவைல டுளைவ) உருவாக்கப்பட வேண்டுமென தி.மு.க. வலியுறுத்தும்.

குறிப்பாக, மிகுந்த வேலைவாய்ப்புகள் உடைய ஆடைகள் தயாரித்தல், பழச்சாறு, குளிர்பானம், உணவு பதனிடுதல், வீட்டு உபயோகத்துக்கான சிறு பொருள்கள், கைவினைப் பொருள்கள், தீப்பெட்டி, சோப்பு, சமையல் எண்ணெய் விநியோகம் போன்ற தொழில்கள் மற்றும் சேவைத் துறைகள் இப்பட்டியலில் இடம்பெற தி.மு.க. வலியுறுத்தும்.

தற்போது இலட்சக்கணக்கான இந்தியர்கள் அரபு நாடுகளில் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். ஆனால், அந்த நாடுகள் மேற்கொண்டுள்ள கொள்கை மாறுதல்கள் காரணமாக அவர்கள் வேலையிழந்து தாயகம் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களைப் பாதுகாத்து, இவர்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கு உத்திரவாதம் அளிக்கக்கூடிய வகையில், இவர்களுடைய பிரச்சினைகளை ஆராய்ந்து முடிவெடுக்கவும் - அவர்களுடைய மறுவாழ்வுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்திடவும் ஒரு குழு அமைத்து, அந்தக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்திட தி.மு.கழகம் வலியுறுத்தும்.

வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்து, வேலை வாய்ப்புக்காகக் காத்திருக்கும் பள்ளி இறுதிப் படிப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்த இளைஞர் களுக்கு உரிய வேலை வாய்ப்பு கிடைத்திடும் வரை, மாதந்தோறும் உதவித் தொகை வழங்கிட மத்திய அரசை வலியுறுத்துவோம்.

59. 10 இலட்சம் மகளிருக்கு மக்கள் நலப்பணியாளர் வேலைவாய்ப்பு

அரசுத் திட்டங்களைப் பயனாளிகள் புரிந்து கொண்டு திட்டங்களின் மூலம் நன்மை அடையும் வகையில் நாடெங்கும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காக, கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ், கழக ஆட்சியில் நியமிக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களைப் போல; அகில இந்திய அளவில் பத்தாம் வகுப்பு வரை படித்த பத்து இலட்சம் மகளிர் கிராமப் பணியாளர்கள் நியமிக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளுமாறு வலியுறுத்துவோம்.

60. 10 இலட்சம் பேருக்கு சாலைப் பணியாளர்கள் வேலைவாய்ப்பு

தலைவர் கலைஞர் தலைமையிலான தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் மாநில நெடுஞ்சாலைகளை பராமரிப்பதற்கு நியமிக்கப்பட்டது போல - மத்திய அரசுத் திட்டத்தின்கீழ் தரம் உயர்த்தி அமைக்கப்படும் சாலைகளைப் பராமரிப்பதற்கும், 13,000 கிலோமீட்டர் தங்க நாற்கரச் சாலைகள் மற்றும் கிழக்கு - மேற்கு; வடக்கு - தெற்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆகியவற்றைப் பராமரிப்பதற்கும் பத்தாம் வகுப்பு வரை படித்த இளைஞர்கள் 10 இலட்சம் பேர் சாலைப் பணியாளர்களாக நியமிக்கப்பட வேண்டுமென வலியுறுத்துவோம்.

61. குடிநீர்

இந்தியா முழுமைக்கும் குடிமக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் (ஞடிவயடெந னுசiமேiபே றுயவநச) வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளவும், குடிநீர் வழங்குதலை முறைப்படுத்துவதற்கு வல்லுனர் குழு நியமிக்கப்படவும் தி.மு.க. பாடுபடும்.

சென்னைப் பெருநகர், குடிநீர் பற்றாக்குறையால் மிகப் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. எல்லா கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் இதேநிலை நீடிக்கிறது. இதனைப் போக்குவதற்கு மத்திய அரசு, அவசர கால நடவடிக்கையாகக் கருதி, (நுஅநசபநnஉல ஆநயளரசந) போதிய நிதி உதவி செய்யவேண்டுமென்று தி.மு.க. வலியுறுத்தும்.

62. மழை நீர் சேகரிப்பு

நிலத்தடி நீர் மட்டம் மிக வேகமாகக் குறைந்து கொண்டே போவதால், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் தொழிற்சாலைகள் பயன்படுத்துகின்ற தண்ணீரின் அளவை கணக்கில் எடுத்துக் கொண்டு, கட்டாயமாக ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மழை நீர் சேகரிப்புத் திட்டங்களை நிறைவேற்றிடவும் - மேலும், லாபம் ஈட்டும் தொழிற்சாலைகள், தங்களுடைய லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை இத்திட்டங்களுக்குப் பயன்படுத்தும் வகையில் புதிய சட்டம் ஒன்றினை மத்திய அரசு கொண்டுவரவும் தி.மு.கழகம் வற்புறுத்தும்.

63.மரபுசாரா எரிசக்தி

சுற்றுச்சூழல் மேம்பாட்டினையும், நீடித்த நிலைத்த வளர்ச்சிக்கு முன்னுரிமை வழங்கும் வகையிலும் காற்று, சூரிய ஒளி, மற்றும் கடல் அலைகள் ஆகியவற்றின் சக்திகளைக் கொண்டு மரபுசாரா எரிசக்தி உற்பத்தி செய்ய சிறப்புத் திட்டங்கள் வகுத்து முனைப்புடன் செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்.

கிராமங்களில் உள்ள அரசு நிலங்களில் அந்தந்த கிராமத்தின் தேவையை கருத்தில் கொண்டு, சூரியஒளி மின் உற்பத்தி செய்திட, உரிய திட்டம் வகுத்துச் செயல்படுத்திட மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

64.மக்கள் நல்வாழ்வு

வருமுன்காப்போம் திட்டம்

கழக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு, மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்ற "வருமுன்காப்போம்'' திட்டத்தை அகில இந்திய அளவில் விரிவுபடுத்த வேண்டுமென தி.மு.கழகம் வலியுறுத்தும்.

மேலும் நாட்டின் மொத்த உள்உற்பத்தியில் (ழுசடிளள னுடிஅநளவiஉ ஞசடினரஉவ) 3 சதவிகிதம், மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வற்புறுத்தும்.

65. இந்திய உள்நாட்டு மருத்துவத் துறையில் உயர் ஆராய்ச்சி

இந்தியாவின் உள்நாட்டு மருத்துவ முறைகளான சித்த மருத்துவம், , ஹோமியோபதி, யுனானி மருத்துவம் மற்றும் ஆயுர்வேதம் ஆகிய இயற்கை மருத்துவ முறைகளை கோடிக்கணக்கான இந்திய மக்கள் பின்பற்றி வருகிறார்கள். இந்த உள்நாட்டு மருத்துவ முறைகளில் உயர் ஆய்வு மேற்கொள்வதற்கும் - பின்விளைவுகள் இல்லாத இந்த மருத்துவ முறைகளை, மக்கள் நம்பிப் பயன்படுத்துவதற்கும் ஏதுவாக ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் ஆயுர்வேத மருத்துவப் பல்கலைக் கழகத்தைப் போல, தமிழகத்தில் "சித்த மற்றும் யுனானி மருத்துவ முறைகளுக்கான பல்கலைக் கழக"த்தை நிறுவிட மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

English summary
The Dravida Munnettra Kazhagam (DMK) will continue to urge the Centre to bring suitable amendments to the official Languages Act to make official languages of all States as official languages at the Centre, the manifesto released on Tuesday by party leader M. Karunanidhi stated.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X