"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்
டெல்லி: இந்திய கிரிக்கெட் பொருளாதாரத்தையே தலைகீழாக மாற்றி, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஐபிஎல் தொடரை உருவாக்கிய லலித் மோடி, தான் ஏன் கிரிக்கெட் பிஸ்னஸில் இருந்து நிரந்தரமாக விலகினேன் என்பது தொடர்பாகச் சில அதிர்ச்சிகரமான உண்மைகளை உடைத்துள்ளார். மும்பை நிழலுலகத் தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது 'டி-கம்பெனி' கொடுத்த தொடர் கொலை மிரட்டல்களே இதற்குக் காரணம் என்ற பகீர் தகவலைக் கூறியிருக்கிறார்.
இன்று உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் தொடராக மாறி நிற்கும் ஐபிஎல் தொடரை ஆரம்பித்தவர் லலித் மோடி. 2008ல் அவர் உருவாக்கிய இந்த ஐபிஎல் தொடர் தான் இன்று உலகமே பார்க்கும் ஒரு முக்கியமான கிரிக்கெட் தொடராக மாறி நிற்கிறது. ஆனால், இந்தத் தொடரை ஆரம்பித்த லலித் மோடி, கடந்த 2010-ஆம் ஆண்டு இந்தியாவில் நிதி முறைகேடு புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து லண்டனுக்குத் தப்பிச் சென்றார்.

லலித் மோடி
இதற்கிடையே கிரிக்கெட் பிஸ்னஸில் இருந்து ஏன் விலகினேன் என்பது தொடர்பாக அவர் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். மும்பை நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது 'டி-கம்பெனி' கொடுத்த தொடர் கொலை மிரட்டல்களே தனது முடிவுக்குக் காரணம் என்று அவர் சொன்னார். இதற்கிடையே சமீபத்தில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு லலித் மோடி அளித்த பேட்டியில், 2012-ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஒரு பகீர் சம்பவம் குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
என்ன நடந்தது
நள்ளிரவு 3:30 மணிக்கு லண்டனைச் சேர்ந்த ஒரு சூதாட்ட ஃபிக்சர் லலித் மோடியைத் தொடர்பு கொண்டு, "பாபா" என்ற இடைத்தரகரின் பென்ட்ஹவுஸ் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வரும்படி வற்புறுத்தியுள்ளார். அங்கு லலித் மோடி சென்றதும், அந்த இடைத்தரகர் மொட்டை மாடிக்குச் சென்று, சாட்டிலைட் போன் மூலம் நேரடியாகத் தாவூத் இப்ராஹிமைத் தொடர்பு கொண்டு ஸ்பீக்கரில் போட்டுள்ளார்.
இது குறித்து லலித் மோடி பேசுகையில், "அந்த நொடியில் பயத்துல என் பேன்ட்டிலேயே சிறுநீர் கழித்துவிட்டேன்.. இதைச் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.. அப்போது பிரிட்டிஷ் எம்ஐ5 பாதுகாப்பு அதிகாரிகள் கீழேதான் நின்று கொண்டிருந்தார்கள். போனில் பேசிய தாவூத், இனிமேல் உன்னுடைய எல்லா கதையும் முடிந்தது என்று கூறிவிட்டுப் போனை கட் செய்தார்" என்று அந்த சம்பவத்தை விவரித்துள்ளார். இதன் பிறகு, ஐபிஎல் அணியின் கட்டுப்பாட்டைத் தங்களுக்குத் தர வேண்டும் என்றும், சூதாட்டச் சந்தையில் தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும் என்றும் வாராவாரம் மிரட்டல் கால்கள் வந்துள்ளன.
எப்படி தொடங்கியது
ஆனால், இந்த பிரஷர் போடும் சம்பவங்கள் 2009ல், அதாவது ஐபிஎல் 2வது சீசனிலேயே ஆரம்பித்துவிட்டதாம். அப்போது இந்தியாவில் லோக்சபா நடந்ததால், லலித் மோடி அதிரடியாக ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரையும் தென்னாப்பிரிக்காவிற்கு மாற்றினார். இந்தத் திடீர் மாற்றத்தால், இந்தியாவில் சட்டவிரோதமாக இயங்கும் பல ஆயிரம் கோடி சூதாட்ட மார்க்கெட் மொத்தமாக நிலைகுலைந்தது.
ஐபிஎல் நடக்காது, ரத்தாகிவிடும் என்று பந்தயம் கட்டியிருந்த நிழலுலக புக்கிகள் இதனால் பெருமளவில் பணத்தை இழந்தனர். அந்த நஷ்டத்தை லலித் மோடிதான் தர வேண்டும் என்று தாவூத் கேங் மிரட்டியுள்ளது. ஆனால் தான் லஞ்சம் வாங்க மறுத்ததாலும், ஸ்பாட் ஃபிக்சிங்கை தடுத்ததாலும் தன் மீது பல நாடுகளில் கொலை முயற்சிகள் நடந்ததாக லலித் மோடி கூறியுள்ளார். மும்பை வீட்டின் வெளியே துப்பாக்கிச் சூடு, ஜோகன்னஸ்பர்க்கில் கொலை முயற்சி, லண்டனில் மகனைக் கடத்த முயற்சி எனப் பல சம்பவங்களை அவர் பட்டியலிட்டுள்ளார்.
ஒரே ஆப்ஷன்
தாவூத் இப்ராஹிமின் இந்த ஹிட் லிஸ்ட்டில் இருந்து லலித் மோடி எப்படித் தப்பினார் என்ற கேள்விக்கு, கிரிக்கெட்டை விட்டு விலகுவதுதான் அவர்கள் தனக்கு கொடுத்த கடைசி ஆப்ஷன் என்கிறார் லலித் மோடி. இது தொடர்பாக அவர் மேலும், "நான் எந்தப் பிரச்சனையும் தீர்க்கவில்லை. நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுகிறேன் என்று அவர்களுக்கு வாக்குக் கொடுத்தேன். நான் சொன்னபடியே விலகினேன்" என்று லலித் மோடி கூறியுள்ளார்.
நீங்கள் கிரிக்கெட்டை விட்டு முழுமையாக வெளியேறியதற்குத் தாவூத் இப்ராஹிம்தான் காரணமா என்று கேட்டதற்கு, "ஆம், அதுதான் மிக முக்கியமான, மிகப்பெரிய காரணங்களில் ஒன்று" என்று ஓப்பனாக ஒப்புக்கொண்டுள்ளார்.
லலித் மோடி
2008 முதல் 2010 வரை ஐபிஎல் தலைவராக இருந்து, விளையாட்டு மற்றும் பாலிவுட் கிளாமரை இணைத்து கிரிக்கெட் உலகையே மாற்றியவர் லலித் மோடி. ஆனால், 3வது சீசன் முடிந்ததும் நிதி முறைகேடு, ஏல மோசடி போன்ற புகார்களால் பிசிசிஐ அவரை சஸ்பெண்ட் செய்தது. உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி அவர் லண்டன் தப்பிய நிலையில், 2013ல் பிசிசிஐ அவருக்கு வாழ்நாள் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications