தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு
சென்னை: கடந்த மே மாதத்துடன் முடிவடைந்த 2025-26 காவிரி தண்ணீர் ஆண்டில், கர்நாடகாவிடம் இருந்து தமிழகத்திற்கு உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த இலக்கை விடக் கூடுதலான அளவு தண்ணீர் கிடைத்துள்ளது. இருப்பினும், ஜூன் 1 முதல் தொடங்கியுள்ள நடப்பு தண்ணீர் ஆண்டில் போதிய மழையின்மை மற்றும் அணை நீர்மட்டம் குறைவு காரணமாகத் தமிழகத்திற்குப் புதிய சவால் காத்திருக்கிறது..
தமிழ்நாடு கர்நாடகா இடையே பல ஆண்டுகளாகவே காவிரி விவகாரம் நீண்ட காலம் நீடிக்கும் மோதலாகவே இருந்து வந்துள்ளது. இப்போது கூட மேகதாது விவகாரம் பூதாகரமாக வெடிக்கிறது. இது ஒரு பக்கம் இருக்கக் காவிரியில் இருந்து நமக்கு வர வேண்டிய நீரை நாம் பெற்று வருகிறோம். கடந்தாண்டு கூடுதல் நீர் வந்த நிலையில், இந்தாண்டு நீரின் அளவு குறையலாம் எனச் சொல்லப்படுகிறது.

காவிரி நீர்
அதாவது 2007-ஆம் ஆண்டின் காவிரி நீர் விவாதத் தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவு மற்றும் 2018ஆம் ஆண்டின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, ஒரு ஆண்டில் (ஜூன் முதல் மே வரை) கர்நாடகா தமிழகத்திற்கு பிலிகுண்டுலு எல்லையில் 177.25 டிஎம்சி தண்ணீரைத் திறந்து விட வேண்டும். ஆனால், கடந்த 2025 ஜூன் முதல் 2026 மே வரையிலான காலகட்டத்தில், தமிழக- கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் சுமார் 330 டிஎம்சி தண்ணீர் பதிவாகியுள்ளது. இது உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட அளவை விட மிக அதிகமாகும். மத்திய நீர் ஆணையம் இந்த டேட்டாவை கண்காணித்து உறுதி செய்துள்ளது.
அதிகம்
நிர்ணயிக்கப்பட்ட அளவை விட தமிழ்நாடு கூடுதல் தண்ணீர் பெறுவது இது 7வது முறையாகும். மேலும், ஆண்டின் மொத்த நீர்வரத்து 300 டிஎம்சிக்கு மேல் கிடைப்பது இது இரண்டாவது முறையாகும். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், மொத்தமுள்ள 330 டிஎம்சி தண்ணீரில், சுமார் 292 டிஎம்சி தண்ணீர் ஜூன் முதல் அக்டோபர் வரையிலான முதல் ஐந்து மாதங்களிலேயே தமிழகத்திற்கு வந்து சேர்ந்துள்ளது.
அணைகள்
கடந்த ஆண்டு தண்ணீர் வரத்து அபரிமிதமாக இருந்தாலும், ஜூன் 1 (திங்கள்கிழமை) முதல் தொடங்கியுள்ள நடப்பு ஆண்டு நிலைமை அவ்வளவு சாதகமாகத் தெரியவில்லை. இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விடக் குறைய வாய்ப்புள்ளதாகவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கர்நாடக மற்றும் தமிழக அணை நிலவரங்களும் கவலையளிக்கும் விதமாக உள்ளன.
மேட்டூர் அணை நிலவரம்: நேற்று புதன்கிழமை (ஜூன் 3) நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் இருப்பு 41.72 டிஎம்சியாக மட்டுமே உள்ளது. ஆனால், கடந்த ஆண்டு இதே நாளில் மேட்டூர் அணையில் 82.32 டிஎம்சி தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது கடந்த ஆண்டை விடப் பாதி அளவு தண்ணீர்தான் இப்போது உள்ளது.
கர்நாடக அணைகள்: இதேபோல கர்நாடகாவின் 4 முக்கிய அணைகளின் மொத்த நீர் இருப்பு கடந்த ஆண்டு 74.5 டிஎம்சியாக இருந்த நிலையில், இப்போது வெறும் 33.62 டிஎம்சியாகக் குறைந்துள்ளது.
குறுவை சாகுபடி
அணைகளில் தண்ணீர் குறைவாக இருந்தாலும், தமிழகக் காவிரி டெல்டா மாவட்டங்களில் 'குறுவை சாகுபடி' பரப்பளவு கடந்த ஆண்டை விடச் சுமார் 30,000 ஏக்கர் அதிகரித்துள்ளது. ஜூன் 1 நிலவரப்படி, சுமார் 2.1 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் பில்டர் பாயிண்ட் வசதி உள்ள பகுதிகளில் இந்தச் சாகுபடி தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் இந்த எண்ணிக்கை 2.5 லட்சம் ஏக்கரைத் தொடும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.
இதன் காரணமாக டெல்டாவின் இயல்பான குறுவை சாகுபடி பரப்பளவு 4.4 லட்சம் ஏக்கராக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பருவமழை ஏமாற்றினால் சாகுபடி பரப்பளவு மேலும் அதிகரிப்பது கடினம் என்றும் விவசாயத் துறை எச்சரித்துள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications