அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலகத்தில் அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்ற நிகழ்ச்சியின் போது அங்கு இருந்த கலைஞர் கருணாநிதி புகைப்படம் அகற்றப்பட்டதாக வந்த செய்தி அறிந்து நொந்து போனதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். மேலும், கலைஞர் படம் மட்டும் அகற்றப்படுவதற்கு என்ன காரணம்? இந்த அரசு கலைஞருக்கு விரோதமான அரசா? இது அரசு மற்றும் அமைச்சர் செய்த காரியம் என நான் நினைக்கவில்லை என கூறியுள்ளார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகைப்படம், அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்ற நிகழ்ச்சியின்போது அகற்றப்பட்டது. பின்னர் நிகழ்ச்சி முடிந்த போது மீண்டும் கலைஞர் படம் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு திமுக சார்பில் கண்டனம் தெரிவிக்கபட்டது. இந்த நிலையில் கவிஞர் வைரமுத்துவும் இந்த செய்தி அறிந்து மனம் வெந்துபோனதாக தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

Vairamuthu Upset Over Removal of Karunanidhi Portrait Ahead of Rajmohan s Visit

என்னை மிகவும் துக்கத்தில் ஆழ்த்தியது

நேற்று தேவநேயப் பாவாணர் நூலகத்தில் ஒரு இலக்கிய விழா நிகழ்ந்து இருக்கிறது. தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இதில் கலந்து கொண்டிருந்தார். அவர் வருகிறார் என்று சொன்னதும் அங்கு நடந்த நிகழ்வுதான் என்னை மிகவும் துக்கத்தில் ஆழ்த்தியது. இது அரசு துறைக்கு உட்பட்ட அரங்கம். அந்த அரங்கத்தில் பெரியார், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் என இத்தனை பேரது படங்கள் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.

நொந்து, வெந்து போனேன்..

அமைச்சர் வருவதற்கு முன்னால் கலைஞர் படம் மட்டும் அகற்றப்பட்டு இருக்கிறது. இதைக் கேட்டு நான் வெந்து போனேன்.. நொந்து போனேன்.. கலைஞர் படம் மட்டும் அகற்றப்படுவதற்கு என்ன காரணம்? இந்த அரசு கலைஞருக்கு விரோதமான அரசா? இது அரசு செய்த, அமைச்சர் செய்த காரியம் என நான் நினைக்கவில்லை. அதிகாரிகளின் அச்சம், அதிகாரிகளின் சுய முடிவு, அதிகாரிகளின் அறியாமை எனச் சொல்ல விழைகிறேன்.

இந்நாள் முதல்வர் விஜய், உதயநிதிக்கு விரோதியாக இருக்கலாம். ஸ்டாலினுக்கு விரோதி என நினைத்துக் கொள்ளலாம். ஆனால் கலைஞருக்கு அவர் ஒருபோதும் விரோதியாக இருக்க மாட்டார் என நினைக்கிறேன். நம்புகிறேன். ஏனென்றால் இன்று அவர் அமர்ந்திருக்கும் முதல்வர் நாற்காலி முன்னவர்களால் செழுமைப்படுத்தப்பட்டது. முன்னவர்களால் பெருமைப்படுத்தப்பட்டது. இந்தப் பெருமைதான் இந்த நாற்காலிக்கு பெரிய வரலாற்றைக் கொடுத்து கொண்டு இருக்கிறது.

கலைஞர் இல்லாமல் செம்மொழி உண்டா?

நான் கேட்கிறேன். அரசு சொல்லாமல் அதிகாரிகள் எப்படி இப்படி நடந்துகொள்ளலாம்? அந்த விழா முடிந்ததும் கலைஞர் படம் மீண்டும் மாட்டப்பட்டதாக அறிகிறேன். கலைஞர் இல்லாமல் தமிழ் உண்டா? கலைஞர் இல்லாமல் தமிழனுக்கு பீடம் உண்டா? கலைஞர் இல்லாமல் செம்மொழி உண்டா?

எனவே இந்த அரசு முன்னவர்களைப் போற்றுகிற அரசாக இருக்க வேண்டும் என விழைகிறேன். எதிரி என்று ஒருவனைத் தீர்மானித்துக் கொள்வதும், கொள்கை என்று ஒன்றை வகுத்துக் கொள்வதும், எதை நோக்கிய பயணம் என்பதைத் திட்டமிடுவதும் அரசியலின் அடிப்படை கச்சாப்பொருள். ஆனால் அதையெல்லாம் எங்கள் முன்னவர்களை மதித்துக்கொண்டுதான் அந்தச் செயல்கள் நடைபெற வேண்டும் என்பது எங்களைப் போன்ற தமிழ் அன்பர்களின் எண்ணம். இவ்வாறு அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+