பாம்பு முதல் பாஸ்போர்ட் வரை டிராமா செய்த புனே பெண்! 3 முறை தப்பிய தொழிலதிபர் உயிர்! கேதன் கொலை பகீர்
மும்பை: "என் மகன் நிரபராதி என்றும், இந்த கொடூரக் குற்றத்தில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக சக குற்றவாளியான சியா கோயல் எனது மகனை திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கில் சிக்க வைத்துள்ளார் என்று புனே கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சேத்தன் என்பவரின் தந்தை பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான லோஹகாட் கோட்டையில் கடந்த ஜூன் 18ம் தேதி இந்த ஷாக் சம்பவம் அரங்கேறியது.

கேதன் அகர்வால்
புனேயைச் சேர்ந்த 26 வயதான பிரபல ரியல் எஸ்டேட் நிறுவன இயக்குநரான கேதன் அகர்வால், தனது நிச்சயிக்கப்பட்ட மணமகள் சியா கோயல் மற்றும் அவளது கள்ளக்காதலன் சேத்தன் சவுத்ரி ஆகியோரால் சுமார் 3,300 அடி உயரக் கோட்டையிலிருந்து ஆழமான பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஜூன் 23 அன்று சியா மற்றும் சேத்தன் ஆகிய இருவரையும் புனே கிராமப்புறக் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். தற்போது இருவரும் 7 நாள் நீதிமன்ற காவலில் உள்ளனர்.. இதையடுத்து புனே போலீசார் ஒரே அறையில் நேருக்கு நேர் உட்கார வைத்து விடிய விடிய இவர்களிடம் அதிரடி விசாரணை நடத்தியுள்ளனர்.
புனே கோட்டை கொலை
இந்த விசாரணையில், திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த போதே, காதலை மறைத்து அரங்கேற்றப்பட்ட பல்வேறு திடுக்கிடும் சதித்திட்டங்கள் மற்றும் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
அதாவது கடந்த கூருடம் நடந்த ஒரு தொழில்முறை சந்திப்பில் உலர் பழங்கள் (Dry fruits) வியாபாரம் செய்து வந்தவராம் சேத்தன்.. அப்போதுதான் சியாவிற்கு சேத்தனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் கடந்த 2025 நவம்பர் மாதத்தில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. கேதனுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பிறகும், சியா தனது கள்ளக்காதலனுடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளார்.
சியா கேதனை திருமணம் செய்து கொள்வதை விரும்பாத சேத்தன், தங்களது காதலுக்கு கேதன் ஒரு பெரிய முட்டுக்கட்டையாக இருப்பதாக கருதி, அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். அதற்கு பிறகே இந்த ஐடியாவை சியாவிடம் தெரிவித்துள்ளார்.
சியா போட்ட பிளான்
இந்த கொலையில் போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருக்க, சேத்தன் தனது கடையில் கடந்த 3 ஆண்டுகளாக வேலை செய்து வரும் நீரஜ் குமார் என்ற ஊழியரின் செல்போனை வாங்கிக்கொண்டு கோட்டைக்குச் சென்றுள்ளார். அந்த போனில் இருந்துதான் சியாவை பலமுறை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இப்போது நீரஜ் குமாரையும் போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, மளிகைக் கடை நடத்தி வரும் குற்றம் சாட்டப்பட்ட சேத்தனின் அப்பா பாபுலால் சவுத்ரி செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது, "சியா கோயல் என்ற பெண்ணை தங்களுக்கு முன்பின் தெரியாது, போலீஸ் ஸ்டேஷன் போனபோதுதான் முதல் முறையாக பார்த்தேன் லோஹகாட் கோட்டையில், கேத்தன், சியா இருவரும் இருந்த இடத்தில் என் மகன் இல்லை, தொலைவில் மட்டுமே நின்றுகொண்டிருந்தானாம். என் மகன் மிகவும் நல்லவன், இந்த கொலையில் அவனுக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை" என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
சேத்தன் அப்பா கதறல்
இதேபோல் சேத்தனின் மாமா உதயராம் சவுத்ரி பேசும்போது, "சேத்தன் ஒரு விளையாட்டு வீரர்.. இதுவரை இப்படியொரு புகார் அவர் மீது வந்தது இல்லை. ஊடகங்கள் இந்த விவகாரத்தை ஒருதலைப்பட்சமாக சித்தரிக்கின்றன.. பிளான் செய்து தன்னை இந்த வழக்கில் மாட்டி வைத்து விட்டார்கள் என்று சேத்தன் என்னிடம் அழுதுகொண்டே சொல்கிறார்" என்றார்.
சேத்தனின் வழக்கறிஞர் ராம் ஷஹானே நீதிமன்றத்தில் வாதிடுகையில், காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையில் சேத்தனின் நேரடிப் பங்களிப்பு குறித்து எந்தவொரு தெளிவான விவரிப்பும் இல்லை, சியாவின் காதலன் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே அவர் இதில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று வாதிட்டார்.
கண்ணீர் கோரிக்கை
இதனிடையே, காதலித்தவரை கைபிடிக்க நினைத்திருந்தால் திருமணத்தை நிறுத்தியிருக்கலாம், அதை விடுத்து ஏன் என் மகனை கொலை செய்தீர்கள் என்று பாதிக்கப்பட்ட கேதனின் தந்தை கண்ணீருடன் எழுப்பியுள்ள கேள்வி ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கியுள்ளது. புனே காவல்துறையினர் இந்த வழக்கில் மேலும் பல முக்கிய ஆதாரங்களை சேகரித்து கொண்டிருப்பதால், பல திடுக் தகவல்கள் மேலும் வெளியபாகும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications