+2 பசங்க செஞ்ச வேலையை பாத்தீங்களா.. மாசம் 1.5 லட்சமாம்.. GenZ வைப்!
சூரத்தில் இரு பள்ளி மாணவர்கள், பள்ளி கண்காட்சியில் விளையாட்டாக துவங்கிய ஒரு பிஸ்னஸ் இன்று மாதம் 1.5 லட்சம் வரை வருமானத்தை ஈட்டிக்கொடுக்கிறது. இதன் மூலம் பள்ளி படிப்பை முடிக்கும் முன்பே இவர்கள் MBA பட்டம் கொடுக்கும் அறிவை இந்த ஒரு சின்ன பிஸ்னஸ் மூலம் பெற்றுள்ளனர்.
பள்ளி கண்காட்சியில் கோல்டு காஃபி கடையை சிறியதாக ஒரு ஸ்டாலில் தொடங்கியுள்ளனர். 'Aes The Thick Coffee' என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த வணிகத்தில் 150 கப் காபி விற்றனர். இந்த மிகப்பெரிய வெற்றியை சற்றும் எதிர்பாராத இந்த இளசுகள், கோடை விடுமுறையில் முறையாக பிஸ்னஸ் துவங்கி வெறும் மூன்று மாதங்களில் நல்ல வருமானத்தை ஈட்டி பெரும் வெற்றி கண்டுள்ளனர்.

எப்படி தொடங்கியது இந்த வணிகம்?
சூரத்தின் ஃபவுண்டன்ஹெட் பள்ளியில் படித்த ஷ்ரேயன்ஷு ராணா மற்றும் பிரதம் பெங்காவாலா ஆகிய இரு மாணவர்கள், CBSE 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்காக காத்திருந்தனர். அவர்கள் வெறுமனே வீட்டில் இருக்காமல், பள்ளியில் நடந்த வணிகக் கண்காட்சியில் பெற்ற வெற்றியை மேலும் பெரியதாக்க முடிவு செய்தனர். அந்த கண்காட்சியில் அவர்கள் தயாரித்த கோல்டு காபியை சில மணி நேரத்தில் 150 கப் விற்று வெற்றி கண்டனர்.
இந்த வெற்றி அவர்களுக்கு தைரியம் அளித்தது. தேர்வு முடிவுகளுக்குப் பிறகு விடுமுறையில் ஜாலியாக ஊர் சுற்றாமல், உடனடியாக வணிகத்தில் இறங்க முடிவு செய்தனர். இது அவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.
எப்படி தொடங்கினார்கள்?
இருவரும் சேர்ந்து சுமார் ரூ.90,000 தொகையை முதலீடு செய்தனர். இதில் அவர்களின் சொந்த சேமிப்பு மற்றும் பெற்றோரின் பண உதவி இருந்தது. சாதாரண Food Cart வாங்காமல், இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அழகான, கியூட் வண்டியை தாங்களே வடிவமைத்தனர்.
இதேபோல் இந்த Cold Coffee-ஐ விற்கும் இடத்தை தேர்வு செய்வதில் அவர்கள் மிகவும் கவனமாக இருந்தனர். சூரத்தின் வீர் நர்மத் தென் குஜராத் பல்கலைக்கழகத்திற்கு (VNSGU) எதிரே தங்கள் வண்டியை நிறுத்தினர். அங்கு ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்கள் இருப்பதால், இது சரியான இடமாக இருந்தது. ஏப்ரல் 2026இல் தங்கள் வணிகத்தை தொடங்கினர்.
கோடை வெப்பத்தில் குளிர்விக்கும் வெற்றி
குஜராத் கோடை வெப்பத்தில் Cold Coffee-ஐ விற்பது சவாலாக இருந்தது. ஆனால் அவர்கள் இதை வாய்ப்பாக மாற்றினர். உயர்தரமான, Thick ஆன Cold Coffee-ஐ மலிவு விலையில் விற்றனர். இது பெரிய காபி கடைகளின் விலையை விட மிகவும் குறைவாக இருந்தது.
முதல் நாளே 30 முதல் 35 பாட்டில்கள் விற்றனர். வாடிக்கையாளர்களின் வாய்மொழி மற்றும் சமூக ஊடகங்களின் உதவியால், அவர்களின் வணிகம் வேகமாக வளர்ந்தது. தற்போது அவர்கள் தினமும் மாலை 5:30 மணி முதல் நள்ளிரவு வரை வணிகம் செய்கின்றனர். அதே நேரம் கல்லூரி படிப்பையும் தொடர்ந்து வருகின்றனர்.

வருமானம் எப்படி இருக்கிறது?
மூன்று மாதங்களில் இந்த வணிகம் நல்ல வருமானத்தை ஈட்டியுள்ளது. ஜூன் 2026 நடுப்பகுதியில், அவர்கள் ரூ.1.18 லட்சம் முதல் ரூ.1.58 லட்சம் வரை வருமானம் ஈட்டியுள்ளனர்.
இந்த வணிக அனுபவம் அவர்களுக்கு MBA பட்டப்படிப்பிலும் கிடைக்காத பல பாடங்களை கற்றுத் தந்துள்ளது. சப்ளை செயின் மேலாண்மை, சரக்கு மேலாண்மை, வாடிக்கையாளர் சேவை, பணப்புழக்கம் போன்ற விஷயங்களை நடைமுறையில் கற்றுக்கொண்டனர்.
GenZ வைப்
இந்த இரு இளைஞர்களின் கதை, இளம் தலைமுறையினருக்கு பெரிய உத்வேகத்தை அளிக்கிறது. இதேபோல் இந்த வர்த்தகம் GenZ தலைமுறையினருக்கு ஏற்ற மற்றும் பிடித்தனமான வர்த்தகமாகவும் இருக்கும் காரணத்தால் பள்ளி கண்காட்சியில் சிறிய அளவில் தொடங்கிய வணிகம், சரியான திட்டமிடல் மற்றும் கடின உழைப்பால் வெற்றியை நோக்கி நகர்ந்துள்ளது. அவர்கள் தங்கள் கல்லூரி படிப்பை தொடர்ந்து கொண்டே வணிகத்தையும் நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications