சென்னையில் இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை உட்பட 16 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது குறித்த வெளியான வானிலை அறிவிப்பில் சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, மதுரை, ராணிப்பேட்டை, சேலம், தென்காசி, தேனி, நீலகிரி, திருவள்ளூர், திருநெல்வேலி, திருப்பூர் மற்றும் விருதுநகரில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த 16 மாவட்டங்களுக்கு அடுத்த 2 மணி நேரத்திற்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் மக்கள் சற்று நிம்மதியடைந்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications