திரிஷா போட்டது ஏஐ போட்டோ இல்லையா?.. விஜய்யின் பஸ் வீடியோவில் சிக்கிய ஆதாரம்! ரசிகர்கள் காட்டும் புதிய ‘புரூஃப்’

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை திரிஷா, முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளுக்கு என்ன பதிவு போடப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் தீப்பிடித்தது போல ஓடியது. ஒரு பக்கம், "இந்த முறை திரிஷா கண்டிப்பா ஏதாவது ஸ்பெஷல் போஸ்ட் போடுவார்" என்று காத்திருந்த ரசிகர்கள்; இன்னொரு பக்கம், "ஐயோ அம்மா... இந்த முறை எந்த போஸ்டும் போடாதீங்க" என்று பதட்டத்திலேயே இருந்த விஜய் ரசிகர்கள் - இப்படியாக இரண்டு தரப்பும் திரிஷாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தையே கண்காணித்து கொண்டிருந்த சூழல் உருவானது.

ஆனால் பிறந்தநாள் தினமான ஜூன் 22-ம் தேதி முழுக்க திரிஷா அமைதியாக இருந்தார். இதனால் "இந்த முறை வாழ்த்து இல்லை போல" என்ற பேச்சு பரவியபோதே, அடுத்த நாள் திடீரென திரிஷா போட்ட ஒரு புகைப்படம் இணையத்தையே தலைகீழாக மாற்றியது.

Trisha Vijay CM Vijay

திரிஷா வெளியிட்ட போஸ்ட்

அதில், விஜய் கேக் கட் செய்யும் தருணத்தில் திரிஷா அருகில் இருந்து பார்க்கும் டி புகைப்படத்துடன் அவர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். "To the person who makes it all worth it..." என்ற கேப்ஷனுடன் வெளியான அந்த போஸ்ட் சில நிமிடங்களிலேயே வைரலானது. ஆனால் அந்த வைரல் வேகத்துக்கு சமமாகவே சர்ச்சையும் கிளம்பியது.

அந்தப் புகைப்படத்தை பார்த்த பலரும் "இது சாதாரண birthday wish கிடையாது" என்று சிலர் நேரடியாகவே விமர்சனங்களை தொடங்கிவிட்டனர். குறிப்பாக விஜய் அரசியலுக்கு வந்த பிறகு அவரைச் சுற்றி உருவாகியிருக்கும் அரசியல் கவனிப்பின் நடுவில், இப்படியான தனிப்பட்ட போஸ்ட் தேவையா என்ற கேள்வியும் எழுந்தது. அதைவிட பெரிய விவாதமாக மாறியது "திரிஷா வெளியிட்டது உண்மையான புகைப்படமா... இல்லை ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட படமா?" என்ற சந்தேகம்தான்.

நெட்டிசன்களின் வாதம்

விஜயின் சில ரசிகர்கள் அந்தப் புகைப்படம் இயல்பாக தெரியவில்லை, லைட்டிங் மற்றும் ஃப்ரேமிங் வித்தியாசமாக இருக்கிறது, அதனால் இது AI edit ஆக இருக்கலாம் என்று வாதிட்டனர். சிலர், "இது பழைய புகைப்படத்தை மாற்றி உருவாக்கியது போல இருக்கிறது" என்றார்கள்.

இன்னும் சிலர், "திரிஷா போஸ்ட் போட்ட உடனே பேசுபொருளாக ஆகணும்னு தான் இப்படிச் செய்திருக்காங்க" என்று குற்றம்சாட்டினர். மொத்தத்தில், ஒரு சாதாரண birthday post-ஆக இருக்க வேண்டிய விஷயம், சமூக வலைதளங்களில் டிஜிட்டல் ஃபோரன்சிக் லெவல் விவாதமாக மாறிவிட்டது.

இந்த நிலையில், அந்த சர்ச்சைக்கு இப்போது ஒரு புதிய திருப்பம் வந்திருக்கிறது. இன்று முதலமைச்சர் விஜய் சிறப்பு அரசு பேருந்து சேவைகளை தொடங்கி வைத்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேருந்தில் பயணித்தபடியே எடுக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.

சிக்கிய ஆதாரம்

முதலில் அது வழக்கமான அரசியல் அப்டேட் போலவே பார்க்கப்பட்டது. ஆனால் சில நெட்டிசன்கள் அந்த வீடியோவை frame by frame பார்த்தபோது, அவர்களின் கவனம் நேராக ஒரு விஷயத்தில் போய்ச் சேர்ந்தது - விஜயின் கையில் இருந்த மொபைல் போன்.

அதற்குக் காரணம், திரிஷா வெளியிட்டிருந்த பிறந்தநாள் புகைப்படத்தில் கேக் அருகே மேசையில் இருந்ததாக சொல்லப்படும் ஒரு போன். இப்போது பஸ் நிகழ்ச்சியில் விஜய் கையில் இருந்த போனும், அந்த birthday post-ல் ரசிகர்கள் கவனித்த போனும் ஒரே மாதிரி இருப்பதாக சிலர் சமூக வலைதளங்களில் ஒப்பிட்டு காட்ட ஆரம்பித்துள்ளனர்.

போனின் பின்புற கேமரா அமைப்பு, கவர் வடிவம், நிறம் போன்ற விஷயங்களை zoom செய்து வைத்து, "இதோ பாருங்கள்... இது ஒரே போன் தான்... அதனால் திரிஷா போட்ட போட்டோ ஏஐ கிடையாது, ஒரிஜினல்" என்று ரசிகர்கள் வாதிட ஆரம்பித்திருக்கிறார்கள்.

Trisha Vijay CM Vijay

இந்த 'போன் புரூஃப்' தான் இப்போது சமூக வலைதளங்களில் புதிய ட்ரெண்டாகி வருகிறது. "ஏஐ போட்டோன்னு சொன்னவங்களுக்கு இதுவே பதில்", "திரிஷா போட்டது fake இல்லைன்னு இப்ப புரியுதா?", "ஒரு போனே முழு சர்ச்சையையும் திருப்பி போட்டுடுச்சு" என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள். அதே நேரத்தில், இன்னொரு தரப்பு இதை எளிதாக ஏற்க தயாராக இல்லை. "ஒரே மாதிரி போன் இருந்தாலே படம் உண்மைன்னு நிரூபிக்க முடியாது", "அதே மாடல் போன் பலரிடம் இருக்கலாம்", "இதிலிருந்து முடிவு கட்ட முடியாது" என்று எதிர் வாதங்களும் குவிந்து வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+