For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீண்டும் மாநிலப் பட்டியலில் 'கல்வி', மீத்தேன் எரிவாயு திட்டத்தை கைவிடுக!

By Mathi
Google Oneindia Tamil News

66. கல்வி

மாநிலப் பட்டியலில் மீண்டும் கல்வித் துறை

1950இல் நடைமுறைக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி கல்வி மாநிலப் பட்டியலிலேயே இருந்தது. பல்வேறு இன, மொழி, பண்பாட்டு அடையாளங்களைக் கொண்ட இந்தியாவில், கல்வித்துறை மாநிலங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதுதான் சிறப்பாக இருக்கும் என மத்திய அரசு அமைத்த கோத்தாரி குழுவும் பரிந்துரைகளை அளித்துள்ளது. 1976க்குப் பிறகு கல்வியைப் பொதுப்பட்டியலுக்கு எடுத்துச் சென்றதன் காரணமாகப் பல இடையூறுகளும், முரண்பாடுகளும் கல்வி வளர்ச்சியில் ஏற்பட்டு வருகின்றன என்பதை அனுபவ ரீதியாக உணருவதால், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும் என்று தி.மு.கழகம் வலியுறுத்தும்.

student

சென்ற 2004 நாடாளுமன்றத் தி.மு.கழக தேர்தல் அறிக்கையில் மொத்த உள்உற்பத்தியில் (ழுனுஞ) கல்விக்கு 6 விழுக்காடு ஒதுக்கப்பட வேண்டுமென்று அரசுக்கு ஏற்கனவே பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனினும் அப்பரிந்துரையின்படி 6 விழுக்காடு இதுவரை ஒதுக்கீடு செய்யப்படவில்லை. தற்போது கல்வி பயில்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், கல்விக்கென்று மொத்த உள்உற்பத்தியில்

7 விழுக்காடு நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

67. வேளாண்மை

மாநில அரசுகள் விவசாயத்திற்கென இலவச மின்சாரம் வழங்க முற்பட்டால், அதற்கு உரிமை அளிக்கும் வகையில் மின்சாரக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் தளர்த்தப்பட வேண்டுமென வலியுறுத்துவோம்.

உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட விவசாய விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை (ஆiniஅரஅ ளுரயீயீடிசவ ஞசiஉந) நிர்ணயிக்கப் பாடுபடுவோம். விவசாய உற்பத்தி உயர வழிவகைகள் காணும் கருத்துக்களை வலியுறுத்துவோம்.

உணவுப் பொருள்களின் வணிக ரீதியான உற்பத்திக்கும் அவற்றைப் பதப்படுத்துவதற்கும், சேமித்து வைப்பதற்கும் உரிய திட்டங்கள் உருவாக்கப் படுவதற்கான முயற்சி மேற்கொள்வோம்.

வறட்சி, புயல், வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கைச் சீற்றங்களால் வேளாண் பயிர்கள் பாதிப்புக்குள்ளாக்கப்படும்போது, விவசாயிகளின் உற்பத்திச் செலவைக் கணக்கிட்டு, முழுமையான இழப்பீடு வழங்க வலியுறுத்துவோம். பயிர்க் காப்பீட்டுத் திட்டம் முழுமையாக விவசாயிகளுக்குப் பயனளித்திடும் வகையில், அந்தத் திட்டத்தை எளிமைப்படுத்துவதற்கு விவசாயிகள் சங்கங்களைக் கலந்தாலோசனை செய்து தேவையான திருத்தங்கள் நடைமுறைக்கு வருவதை வலியுறுத்துவோம்.

வளரும் நாடுகளின் வேளாண்மைப் பொருள்கள் ஏற்றுமதியைப் பாதிக்கக்கூடிய வகையில், உலக வர்த்தக அமைப்பின் (று.கூ.டீ) விதிகளை மீறி, வளர்ந்த நாடுகள் தங்கள் நாட்டு விவசாயிகளுக்கு வழங்கிவரும் சலுகைகளைத் தடுத்து நிறுத்துவதன் மூலம் நமது நாட்டு விவசாயிகளைப் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துவோம்.

கரும்பு விவசாயிகளுக்கு உரிய காலத்தில் கரும்பு விலைக்கான தொகையை வழங்கும் வகையில் கூட்டுறவு, பொதுத்துறை மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து ஆலைகளிலும் விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்யப்பட்ட மூன்று மாத கால அவகாசத்திற்குள், மத்திய அரசு நிர்ணயம் செய்யும் கரும்பு ஆதாரவிலை மற்றும் மாநில அரசு வழங்கும் கூடுதல் விலை இரண்டையும் சேர்த்து முழுமையாக விவசாயிகளுக்கு வழங்கிடத் தக்க வழிவகை செய்வதற்கு தி.மு.க. பாடுபடும்.

தேயிலை விவசாயிகள் படும் துயரங்களைக் களைவதற்கு மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென்று தி.மு.க. வலியுறுத்தும்.

காய்கறி, பழங்கள், மலர்கள் ஆகியவற்றின் வணிக ரீதியான உற்பத்திக்கென திட்டங்கள் வகுக்கப்படவும் அவற்றின் ஏற்றுமதி சலுகைகள் உயர்த்தப்படவும் தி.மு.க. வலியுறுத்தும்.

இதற்காகத் தமிழகத்தில் ஒரு மண்டல தாவரவியல் வாரியம் (சுநபiடியேட ழடிசவiஉரடவரசயட க்ஷடியசன) அமைக்கவும், தேசிய அளவில் ஒரு தாவரவியல் பயிற்சி நிறுவனம் (சூயவiடியேட ஐளேவவைரவந டிக ஞடயவே க்ஷiடிடடிபல) அமைக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டுமென்று தி.மு.க. வலியுறுத்தும்.

நாட்டில் உற்பத்தியாகும் உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள், மலர்கள் ஆகியவை உரிய முறையில் பாதுகாக்கப்பட தேவையான அளவு கிடங்குகளும் குறிப்பாக, அழுகக்கூடிய பொருட்களுக்கு குளிரூட்டப்பட்ட கிடங்குகளும் மாவட்டந்தோறும் அமைக்கப்பட வேண்டும் என்று தி.மு.கழகம் வலியுறுத்தும்.

68. காவிரிப் படுகை பகுதியில் மீத்தேன் எரிவாயு

தமிழகத்தின் காவிரிப் படுகைப் பகுதியான திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் பூமிக்கடியில் இருக்கும் மீத்தேன் வாயுவை வணிக ரீதியாக எடுக்கும் பொருட்டு, மத்திய அரசு ஒரு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. அப்போது அந்தத் திட்டத்தினால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்று கூறப்பட்டதால் தமிழக அரசு அதனை நல்லெண்ணத்தோடு ஒப்புக் கொண்டது. ஆனால், மீத்தேன் வாயு கிணறுகள் ஆழமாகத் தோண்டும்போது, பூமிக்கடியில் நிலத்தடி நீர் மிகவும் கீழே செல்வதுடன்; கடல் நீர் உட்புகும் என்பதால்; அந்நிலம் விவசாயத்திற்குப் பயன்படாமல் - வீணாகும். அதனால் இத்திட்டத்திற்கு அப்பகுதி விவசாயப் பெருங்குடி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். எனவே, வளம் மிக்க விவசாயப் பகுதியான காவிரிப் படுகையில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தைக் கைவிட்டு, விவசாயத்தைப் பாதுகாத்திட வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

69. விவசாயிகளுக்கு நெல் அறுவடை இயந்திரம் வழங்கல்

காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு உரிய காலத்தில் நெல் அறுவடை செய்வதற்கு மிகக் கடுமையான ஆள் பற்றாக்குறை ஏற்படுவதால், ஒவ்வொரு கிராமத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களுக்கும், அப்பகுதியில் உள்ள விளைநிலங்களின் பரப்பளவினை கணக்கில் கொண்டு தேவைப்படுகின்ற நெல் அறுவடை இயந்திரங்களை நூறு சதவிகித மானியத்துடன் மத்திய அரசு வழங்கிட வேண்டும்.

நெல் அறுவடை இயந்திரங்களின் பராமரிப்புச் செலவிற்காக, அப்பகுதி விவசாயிகளிடமிருந்து கிராம கூட்டுறவு சங்கங்கள் குறைந்தபட்ச தொகையினை வாடகையாக நிர்ணயித்து பெற்றுக் கொள்ளும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.

70. இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்தல்

இயற்கை வேளாண்மை முறை; விவசாய மண் வளத்தை நீண்ட நாள் பாதுகாப்போடும் வளமோடும் வைத்திருக்கும் என்பதோடு, அத்தகைய முறையில் விளையும் உணவு தானியங்கள் நச்சுத்தன்மையின்றி இருக்கும். எனவே, இயற்கை வேளாண்மை முறையை ஊக்குவிக்கும் முழுமையான திட்டம் ஒன்றை வகுத்துச் செயல்படுத்திடவும், அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்திடவும், இம்முறையைப் பயன்படுத்தும் விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருள்களை மானிய விலையில் வழங்குவதற்கும் தி.மு. கழகம் பாடுபடும்.

71. சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகள் நலன்

சொந்த நிலத்தையும் - உழைப்பையும் மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்ற சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகள், தங்கள் நிலத்தில் விவசாயம் செய்திட தேவைப்படுகின்ற விதை, உரம், இடுபொருட்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் ஆகியவற்றை வாங்க முடியாமல் இருக்கும் நிலையினை உணர்ந்து, அவர்களின் பொருளாதார நிலையினைக் கருத்தில் கொண்டு, விவசாயம் செய்வதற்கு இத்தகைய பொருள்களுக்கு நூறு சதவிகித மானியம் அளித்திட வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

72. விவசாயக் கடன் ரத்து.

சிறு விவசாயிகள் பெற்ற கடன் அனைத்தையும் ரத்து செய்வதோடு, அந்த விவசாயிகளுக்கு இனிமேல் விதை - உரம் - இடுபொருள்கள்- பூச்சிக் கொல்லி மருந்துகள் ஆகியவற்றை அரசாங்கமே மானியமாக வழங்கிட மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

73. நெல், கரும்பு, கொப்பரைத் தேங்காய் மற்றும் பச்சைத் தேயிலை ஆகியவற்றிற்கு குறைந்தபட்ச ஆதரவு விலை

தமிழகத்தின் பெரும்பாலான விவசாயப் பெருங்குடி மக்கள் பயிரிடும் நெல், கரும்பு, தென்னை ஆகிய பயிர்களின் விளைச்சலுக்கு தேவைப்படுகின்ற விதை, இடு பொருட்கள், விவசாயக் கூலி, உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளின் தற்கால விலையேற்றத்தைக் கருத்தில் கொண்டு, அந்தந்த மாநிலங்களின் தேவைக்கேற்ப குறைந்த பட்ச ஆதார விலையினை மத்திய அரசு அவ்வப்போது உயர்த்தித்தரவும் - குறிப்பாக, வரும் ஆண்டில்

கரும்பு டன் ஒன்றுக்கு - ரூ.3,500/-ம்

நெல் குவிண்டால் ஒன்றுக்கு - ரூ.2,500/-

கொப்பரைத் தேங்காய் கிலோ ஒன்றுக்கு - ரூ. 90/-ம்

நிர்ணயம் செய்து, விவசாயிகள் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் அளித்திட மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

மலைவாழ் மக்களின் வாழ்வாதாரமாக உள்ள தேயிலை விவசாயம் தற்போதுள்ள இடுபொருள்களின் விலை உயர்வால் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது. எனவே தேயிலைத் தொழிலையே வாழ்வாதாரத்தின் அடிப்படையாகக் கொண்டுள்ள பல்லாயிரக்கணக்கான தேயிலை விவசாயி களைக் காப்பாற்றும் பொருட்டு ஒரு கிலோ பச்சைத் தேயிலைக்கு ரூபாய் 25 என்று கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டுமென்பதை வலி யுறுத்துவோம்.

74. விலைவாசியைக் கட்டுப்படுத்துதல்

நுகர்பொருள்களின் விலைகளை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கு சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, வாங்கும் சக்தி குறைவாக உள்ள ஏழையெளிய நடுத்தரக் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம். பெட்ரோலியப் பொருள்களின் விலை நிர்ணயம் தற்போது அவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளதால், அந்த நிறுவனங்கள் இலாப நோக்கத்தையே முக்கியமானதாகக் கருதி மாதந்தோறும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை உயர்த்துகின்றன. அதன் காரணமாகப் பொதுமக்களுக்கு பெரும் இடர்ப்பாடுகள் ஏற்படுகின்றன. எனவே இதனைத் தவிர்த்திட பெட்ரோலியப் பொருள்களுக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்வதற்கேற்ப விலை நிர்ணயக் கொள்கையை மாற்றியமைத்திட மத்திய அரசை வலியுறுத்துவோம்.

75.சிலந்தி நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு நிவாரணம்

தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளாக சிலந்தி நோயால் பாதிக்கப்பட்டு, பட்டுப் போன இலட்சக்கணக்கான தென்னை மரங்களுக்கு உரிய இழப்பீட்டினை வழங்கி, தென்னை விவசாயிகளின் துயர் போக்கிட தி.மு.கழகம் மத்திய அரசை வற்புறுத்தும்.

76.மண்வளப் பாதுகாப்பு.

தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது, ஏழை விவசாயிகளுக்கு இலவசமாக நிலத்தைப் பண்படுத்தி விவசாயம் செய்வதற்கு ஏற்ற விதமாக மாற்றி வழங்கியதைக் கருத்தில் கொண்டு, அதைப்போலவே சிறு, குறு விவசாயிகளின் வளமற்ற விவசாய நிலங்களைப் பண்படுத்தி, பயிர் செய்யத் தகுதியான நிலங்களாக மாற்றுவதற்குரிய ஒட்டுமொத்த முதல்முறைச் செலவினை (டீநே கூiஅந நுஒயீநனேவைரசந) மத்திய அரசே ஏற்கவேண்டுமென தி.மு.கழகம் வலியுறுத்தும்.

77. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றம்

விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டு வாழும் விவசாயிகளுக்கு விவசாயப் பருவ காலத்தில் தேவைப்படும் விவசாயக் கூலி ஆட்கள் கிடைக்காமல் ஏற்படும் தட்டுப்பாட்டினைத் தவிர்ப்பதற்கும்;

இத்திட்டத்தில் பணிபுரிவோருக்கு மண்வெட்டி, கடப்பாரை போன்ற உபகரணங்களை இத்திட்ட நிதியிலிருந்து கொள்முதல் செய்து அளித்திடவும்;
விளைச்சல் காலம் தவிர்த்து, எஞ்சியுள்ள அந்த ஆண்டின் அனைத்து நாட்களிலும் கூலித் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்திடும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் உரிய மாற்றங்களைக் கொண்டு வர வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

78. உப்பு உற்பத்தி

உப்பு உற்பத்தியாளர்கள் கடல் சீற்றத்தினால் பாதிக்கப்பட்டு, அதன் மூலம் தங்களது வாழ்வாதாரத்தை இழக்க வேண்டிய சூழ்நிலையிலிருந்து அவர்களைக் காப்பாற்றிட, உரிய பாதுகாப்பு வழங்கிடும் வகையில் திட்டம் வகுத்திட தி.மு.கழகம் பாடுபடும்

79. உப்பளத் தொழிலாளர்கள்

உப்பளத் தொழிலாளர்கள் வேலை நிரந்தரமின்றியும் - மழைக் காலங்களில் வருவாய் இன்றியும் தவிக்கின்ற நிலை தொடர்ந்து இருந்து வருகிறது. இந்நிலையை மாற்றி அமைத்து, உப்பளத் தொழிலாளர்களின் நல்வாழ்வுக்கென ஒரு ஆணையத்தை உருவாக்கி, அதன் மூலம் அவர்களைப் பாதுகாத்திட மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

English summary
The Dravida Munnettra Kazhagam (DMK) will continue to urge the Centre to bring suitable amendments to the official Languages Act to make official languages of all States as official languages at the Centre, the manifesto released on Tuesday by party leader M. Karunanidhi stated.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X