"விஜய் கோட் போடுவது பிரச்சனை இல்லை... எல்லாத்தையும் கோட்டை விடுவது தான் பிரச்சனை!" உதயநிதி தாக்கு
சென்னை: தவெக அரசை மிக கடுமையாக விமர்சித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, விரைவில் தவெக அரசுக்கு முடிவுரை எழுதப்படும் என்றும் ஸ்டாலின் மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்பார் என்றும் தெரிவித்தார். மேலும், முதல்வர் விஜய் கோட் சூட் போடுவது பிரச்சினை இல்லை.. எல்லா விஷயங்களிலும் கோட்டை விடுவதே பிரச்சினை என்றும் அவர் தெரிவித்தார்.
சென்னை ராயப்பேட்டையில் திமுக சார்பில் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது ஆளும் தவெக அரசை கடுமையாக விமர்சித்த உதயநிதி, ஒரு மாதத்தில் தவெக அரசு எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் கொண்டு வரவில்லை என சாடினார்.

உதயநிதி
அவர் மேலும் பேசுகையில், "இந்த புதிய அரசு, பொறுப்பேற்று 25 நாள் ஆச்சு. உருப்படியா ஏதாவது ஒரு திட்டம் கொண்டு வந்திருக்கீங்கன்னு சொல்ல முடியுமா? ஒரு திட்டமும் கிடையாது.. ஏற்கனவே டியூட்டில இருக்கும் காவலர்களை, வெறும் ஸ்டிக்கரை மாற்றி, போலீஸ் ஜீப்பிற்கு வெறும் ஸ்டிக்கரை மாற்றி, சிங்கப்பெண் திட்டம் அப்படின்னு ஒரு திட்டத்தை கொண்டு வருவதாக சொன்னார்கள். ஆனால், அதையும் கொண்டு வர முடியாத நிலைமையில் தான் இன்னைக்கு இந்த ஆட்சி நடந்துக்கிட்டு இருக்கு.
அதாவது ஒரு கூடுதல் செலவு இல்லாத ஒரு திட்டத்தை கூட தொடங்கி வைக்க முடியாத 'சோபா மாடல்' ஆட்சி தான் இன்று நடந்துக்கிட்டு இருக்கு. 2021ல் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்கும்போது, முதல் நாள் சில உத்தரவுகளில் கையெழுத்து போட்டார்.மகளிருக்கு விடியல் பயணத் திட்டம் முதல் கையெழுத்து போட்டாரு. முதல் நாளே அதை கொண்டு வந்தாரு.
திட்டங்கள்
இத்தனைக்கும் அப்போது தமிழக நிதி நிலைமை மோசமாக இருந்தது. கொரோனா இரண்டாவது அலை லாக்டவுன் வேற. மகளிர் விடியல் பயணம், கொரோனா நிவாரண நிதியாக ஒவ்வொரு ரேஷன் அட்டைக்கும் 4,000 ரூபாய், ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு எல்லாம் செய்யப்பட்டது. இதெல்லாம் செய்தது நமது திராவிட மாடல் அரசு. ஆனா இன்னைக்கு இந்த 'சோபா மாடல்' அரசு ஏதாவது ஒரு திட்டத்தை நிறைவேற்றிருக்காங்களா?
நாம இந்த தேர்தலில் சில லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். நம்மை விட 16 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று இன்னைக்கு இந்த ஆட்சி அமைந்துள்ளது. அவங்க எப்படி ஆட்சி அமைத்தார்கள், தேர்தல் முடிவுகள் வந்த பிறகு என்னென்ன கூத்து எல்லாம் நடந்தது என்பதை மக்கள் அனைவரும் தொலைக்காட்சியில் பார்த்து கொண்டு தான் இருந்தார்கள்.
ரிசார்ட் அரசியல்
4ம் தேதி தேதி இரவு நம்முடைய வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் தமிழகத்தில் எல்லா மாவட்டங்களில் இருந்தும் கிளம்பி சென்னைக்கு வர டிக்கெட் புக் பண்ணிட்டு இருந்தார்கள். ஆனால் இன்றைய ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக எங்க போய் தங்கலாம்னு ரிசார்ட்டுல ரூம் புக் பண்ணிட்டு இருந்தாங்க. இதுதான் நம்ம திமுகவுக்கும் மற்ற இயக்கத்திற்கும் உள்ள வித்தியாசம். இதுதான் ஒரு தொண்டன் தன் தலைவன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை. எந்த காலத்திலும் திமுக அந்த ரிசார்ட் பாலிடிக்ஸ்.. கூவத்தூர் மாதிரி ஒரு ரிசார்ட் அரசியலை எப்போதும் செய்யாது.
கோட் சூட்
தமிழ்நாடு மக்கள் சீக்கிரமே தவெக அரசின் முகத்திரையை கிழிப்பாா்கள்.. தவெக அரசுக்கு முடிவுரை எழுத போகிறார்கள். ரீல்ஸ் போட்டவா்கள் செய்தி பாா்க்கிறாா்கள் என முதல்வா் கூறினார். மக்கள் எப்போதும் சட்டசபையை தொடர்ந்து கவனிப்பார்கள். இந்த மாற்றமும் விழிப்புணர்வும் தான் தவெக வீழ்ச்சிக்கு காரணமாக அமைய போகிறது. மீண்டும் திமுக தலைவர் ஸ்டாலின் பதவியேற்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
மேலும், முதல்வர் கருப்பு கோட் போடுவது குறித்தெல்லாம் பேசுகிறார்கள். அதாவது பெரியார் நினைவாகவே விஜய் கருப்பு கோட் போடுவதாக சொல்கிறார்கள். இது மிக பெரிய உருட்டாக உள்ளது. கோட் போடுவது எல்லாம் ஒரு மேட்டரே இல்லை. எல்லா வகையிலும் கோட்டை விடுவது தான் இங்கு பெரிய பிரச்சனைாக இருக்கிறது" என்று கடுமையாக சாடினார்.
-
விஜய் அரசின் முதல் MoU.. பரந்தூருக்கு ஒரு நியாயம்? டேட்டா சென்டருக்கு ஒரு நியாயமா? -
விஜய்க்கு 25 நாள் ஆச்சு.. முதல் ஒப்பந்தம்.. 3 இடத்தில் 3 மெகா திட்டம்.. L&T நிறுவனம் ரூ.18600 கோடி முதலீடு! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு! -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி












Click it and Unblock the Notifications