பெரும்பான்மையை இழந்த எடப்பாடி அரசு- ஜனாதிபதியுடன் வரும் 31-ல் திமுகவினர் சந்திப்பு
தமிழக அரசியல் நிலைமைமை தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை வரும் 31-ந் தேதி திமுகவினர் சந்திக்க உள்ளனர்.
சென்னை: முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வலியுறுத்தி வரும் 31-ந் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை திமுகவினர் சந்திக்க உள்ளனர்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கான ஆதரவை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் வாபஸ் பெற்றுவிட்டதாக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்துள்ளனர். மேலும் 3 எம்.எல்.ஏக்கள் தினகரன் அணிக்கு தாவியுள்ளனர்.

இதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. இதையடுத்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளுநரை நேரில் சந்தித்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வலியுறுத்தினர்.
ஆனால் இந்த விவகாரத்தில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை. இதையடுத்து வரும் 31-ந் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை திமுகவினர் நேரில் சந்திக்க உள்ளனர்.
இச்சந்திப்பின் போது, எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வலியுறுத்தப்பட உள்ளது. இதனிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இடதுசாரி தலைவர்களான ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் முத்தரசன் ஆகியோர் ஆளுநர் வித்யாசாகர் ராவை நாளை நேரில் சந்திக்க உள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications