திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியை அதிமுக கோட்டையாக்கிடுவீங்களோ? 'நத்தத்துக்கு' ஐ. பெரியசாமி சவால்
திண்டுக்கல்: ஆத்தூர் தொகுதியில் மீண்டும் 50 ஆயிரம் வாக்குகள் திமுக பெறும். இதனை தடுக்க அதிமுக அமைச்சர் நத்தம் விசுவநாதன் தயாரா? என திமுக துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி சவால் விடுத்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்துர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் வாக்குசாவடி முகர்கள் கூட்டம் அய்யம்பாளையத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் இ.பெ. செந்தில் குமார் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் திமுக மாநில துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியது: தமிழகத்தில் மக்கள் ஆதரவு திமுகவிற்கு அதிகரித்துள்ளது. இங்கு நான் பிரகடனப்படுத்துகிறேன். திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கபட்டுள்ள முதியோர் உதவி தொகை அனைவருக்கும் அவர்கள் வீடு தேடி சென்று வழங்கப்படும். மு.க.ஸ்டாலின் சொன்னது போல் தழிழகத்தில் லோக்ஆயுத் கொண்டு வரப்பட்டு வேலை வாய்ப்புகளில் லஞ்ச, லாவண்யம் முழமையாக தடுக்கப்படும்.
கடந்த முறைபோல் ஆத்தூர் தொகுதியில் திமுக 50 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் கூடுதலாக பெற்று வெற்றி பெரும். இங்கு வந்து ஆத்தூரை அதிமுக கோட்டை ஆக்குவேன் என்று மார்தட்டும் நத்தம் விசுவநாதனால் வெற்றியை தடுக்க முடியுமா? இதனை நான் சாவாலாக சொல்லி கொள்கிறேன். வரும் தேர்தலில் தொண்டர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டு அனைவரும் ஒருகிணைந்து பாடுபடவேண்டும் என்று பேசினார்.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா!












Click it and Unblock the Notifications