கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் முன் கூடிய தொண்டர்கள்.. பாதுகாப்பு அதிகரிப்பு!
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து தெரிந்து கொள்வதற்காக, திமுக தொண்டர்கள், பொதுமக்கள் பலர் அவரின் கோபாலபுரம் இல்லம் முன் கூடியுள்ளனர்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து தெரிந்து கொள்வதற்காக, திமுக தொண்டர்கள், பொதுமக்கள் பலர் அவரின் கோபாலபுரம் இல்லம் முன் கூடியுள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு தற்போது உடல்நிலையில் நலிவு ஏற்பட்டு இருக்கிறது. அவருக்கு கடந்த 3 நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவரது உடலின் சிறுநீரக பாதையில் தொற்று ஏற்பட்டு இருக்கிறது.

இதன் காரணமாக அவர் இப்போது வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். காவிரி மருத்துவமனை மருத்துவர்கள் அவருக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அவர் நலமுடன் இருக்கிறாரா என்று பார்ப்பதற்காக, திமுக தொண்டர்கள் பலர் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்துள்ளனர். அதேபோல், பொதுமக்கள் பலரும் அங்கு கூடி இருக்கிறார்கள். அதிகாலையில் இருந்து அங்கு பலர் கூடிக்கொண்டே இருக்கிறார்கள்.
இதனால், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. போலீஸார் பலர் அங்கே குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். கருணாநிதி வீட்டை சுற்றிலும் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோபாலபுரத்திற்கு செல்லும் சாலைகள் இரும்பு தடுப்புகளால் தடுக்கப்பட்டு இருக்கிறது. இன்று நிறைய தலைவர்கள் அங்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications