சிவகங்கை: பில்கலெக்டரை அடித்த திமுக பிரமுகர்கள் கைது
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பேரூராட்சி பில் கலெக்டரை தாக்கிய திமுக மாவட்ட துணை செயலாளர் சேங்கை மாறன் மற்றும் அவரது மைத்துனர் ரவியை போலீசார் கைது செய்தனர்.
திருப்புவனம் பேரூராட்சியில் வரி வசூல் செய்யும் பில் கலெக்டராக தனபாலன் என்பவர் உள்ளார் பாக்யா நகரில் அப்ருவல் இல்லாத பிளாட்களை பேரூராட்சி தலைவராக இருக்கும் வசந்தியின் கணவரும் திமுக மாவட்ட துணை செயலாளருமான சேங்கைமாறன் விற்பனை செய்துள்ளார். அந்த பிளாட்களுக்கு போலீயாக பேரூராட்சி வரி ரசீது போட்டதாக சிவகங்கை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ஒருவரை கைது செய்துள்ளனர்.
அந்த பாக்யா நகருக்கு வரி ரசீது போடச்சொல்லி சேங்கைமாறன் மைத்துனர் ரவி பில்கலெக்டரை மிரட்டியுள்ளார். தர மறுக்கவே தகாத வார்த்தைகளை சொல்லி மிரட்டியுள்ளார். அப்போது அங்கு வந்த சேங்கைமாறன் பில்கலெக்டர் தனபாலனை சராமாரியாக தாக்கியுள்ளார். இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அலுவலக ஊழியர்கள் பணிகளை நிறுத்தி விட்டு அலுவலகத்தை விட்டு வெளியேறினர்.
இதனையடுத்து பில் கலெக்டர் தனபாலன் திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். புகாரை பெற்ற இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சேங்கைமாறனையும் ரவியையும் டிகது செய்தார். திமுகவினர் பிரச்சனை ஏற்படுத்த கூடும் என கருதி டிஎஸ்பி அன்பு தலைமையில் திருப்புவனத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் சேங்கைமாறன் கொடுத்த புகாரின்பேரில் கவுன்சிலர் பழனியை போலீசார் கைது செய்துள்ளனர்.
தனபாலன் கூறுகையில் பேரூராட்சி தலைவர் வசந்தியின் கணவர் சேங்கைமாறன் தினசரி அலுவலகத்தில் வந்த அமர்ந்து கொண்டு அராஜகம் செய்கிறார். ஊழியர்களை தரக்குறைவாக பேசுவது, அவர்கள் சொன்னபடி செய்யாவிட்டால் தாக்குவத போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர், தினசரி ஊழியர்களை தாக்குவது வழக்கம் இன்று என்னை சராமாரியாக அடித்து உதைத்ததுடன், கொலை செய்யவும் முயற்சித்தார் எனவே புகார் செய்துள்ளேன் என்றார்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications