‛‛ஓரம்போ’’.. அரசு பஸ்சை ஓட்டி பள்ளத்தில் விட்ட திமுக எம்எல்ஏ.. பதறிய கட்சியினர்.. வெளியான வீடியோ
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே புதிய வழித்தடத்தில் பெண்களுக்கான இலவச பஸ் சேவையை துவக்கி வைக்கப்பட்டது. இதையடுத்து அந்த பஸ்சை திமுக எம்எல்ஏ ஏழிலரசன் ஓட்டிய நிலையில் பள்ளத்தில் சிக்கி திடீரென சாய்ந்தது. இதனால் பதறி பஸ்சில் இருந்த அனைவரும் வேகமாக வெளியேறினர். இதனால் அதிர்ஷ்டவசமாக பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
தமிழ்நாட்டில் அரசு நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதன்மூலம் மாதந்தோறும் லட்சக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் தான் காஞ்சிபுரம் அருகே கீழ்கதிர்ப்பூர் பகுதியில் புதிய வழித்தடத்தில் பெண்களுக்கான இலவச பேருந்து சேவையை இயக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதற்கு போக்குவரத்து கழகம் செவியும் சாய்த்தது.

புதிய வழித்தடத்தில் பஸ் சேவை
இந்நிலையில் தான் கீழ்கதிர்பூர் குடியிருப்பு பகுதியில் புதிய வழித்தடத்தில் பெண்களுக்கான இலவச பஸ் சேவையை தொடங்கி வைக்கப்பட்டது. பஸ்சில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் போட்டோக்கள் ஒட்டப்பட்ட இருந்தன. பஸ்சின் முன்புறம் வாழைகள் கட்டப்பட்டு இருந்ததோடு, பஸ்சை சுற்றி மாவிலை தோரணம் கட்டப்பட்டு இருந்தது.

பூஜையுடன் துவக்கம்
இதையடுத்து பூஜைகள் நடத்தப்பட்டது. அதன்பிறகு காஞ்சிபுரம் எம்பி செல்வம் மற்றும் காஞ்சிபுரம் சட்டசபை தொகுதியின் திமுக எம்எல்ஏ எழிலரசன் ஆகியோர் பச்சை கொடியசைத்து பஸ் சேவையை தொடங்கி வைத்தனர். இதையடுத்து கட்சியினர் பஸ்களில் ஏறி அமர எம்எல்ஏ எழிலரசன் சிறிது தூரம் பஸ் ஓட்டினார்.

பள்ளத்தில் சிக்கிய பஸ்
அப்போது அந்த பகுதியில் திமுக கொடியுடன் நட்டு வைக்கப்பட்டு இருந்த கம்பத்தில் பஸ் மோதியது. மேலும் பள்ளத்தில் பஸ் இறங்கியதோடு அருகே இருந்த மின் கம்பம் மீது உரசும்படியாக நின்றது. இதை பார்த்த கட்சியினர் மற்றும் எம்எல்ஏ எழிலரசன் உள்ளிட்டவர்கள் உடனடியாக பஸ்சில் இருந்து இறங்கினர். இதையடுத்து கட்சியினர் அனைவரும் சேர்ந்து பள்ளத்தில் இறங்கிய பஸ்சை சாலைக்கு தள்ளினர்.

வெளியான வீடியோ
அதன்பிறகு பஸ் டிரைவர் பஸ்சை ஓட்டி சென்றார். இதற்கிடையே திமுக எம்எல்ஏ ஏழிலரசன் அரசு பஸ்சை ஓட்டி பள்ளத்தில் விட்ட சம்பவம் தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி












Click it and Unblock the Notifications